Show all

காலக்கெடு திங்கட் கிழமை இரவு! கடைசி கட்ட முயற்சி என்று இராமர் பிள்ளை காணொளி வெளியீடு

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது கண்டுபிடிப்பை முழுமையடையவிடாமல் சதி நடப்பதாக ராமர் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை மீண்டும் பேசுபொருளுக்கு வந்திருக்கிறார். மூலிகை பெட்ரோல் தயாரிப்பில் வழக்கு, மிரட்டல், சிறை என பரபரப்பில் இருந்து விடுபட்டு இருந்த ராமர் பிள்ளை மீண்டும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பில் தீவிரம் காட்டி வந்தார். இந்நிலையில், மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது கண்டுபிடிப்பை முழுமையடைய விடாமல் சதி நடப்பதாக ராமர் பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து தனது இறுதி மரண வாக்குமூலம் எனக் கூறி அவர் வெளியிட்டுள்ள காணொளியில் கடந்த 21 ஆண்டுகளாக போராடி விட்டேன். இனிமேலும் போராடுவதில் பொருள் இல்லை.  மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் தனது கண்டுபிடிப்பை முழுமைப்படுத்த விடாமல் சதி நடக்கிறது. மக்களுக்கு இது கிடைத்து விடக்கூடாது என்பதற்காக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். எனது உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு இதைக் கொண்டுவர பாடுபடுவேன். நடுவண் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை உள்ளிட்டோர் எனது ஆய்வை நேரில் வந்து பார்க்க வேண்டும். 

நேரில் பார்த்து அதன் உண்மைத் தன்மையை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மரணத்தின் வாயிற்படியில் நின்று கொண்டு, இதைத் தெரிவிக்கிறேன். முன்னாள் அமைச்சர் முரளி மனோகர் ஜோசி மற்றும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்குக் கொலை மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. திங்கட் கிழமைக்குள் நீங்கள் இதனைச் செய்யாவிட்டால் செவ்வாய் அன்று நான் இருக்க மாட்டேன். இந்த உலகத்தை விட்டுச் செல்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

இராமர் பிள்ளையின் கண்டு பிடிப்பு பெட்ரோலாகவே இருக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லை. ஏதாவதொரு எரிபொருளாக இருக்கலாம். கட்டுபடியான விலைக்கு தயாரிக்க முடியுமா? மாற்று எரிபொருளாக பயன் படுத்த முடியுமா? அல்லது எதற்கும் பயன்படாத ஏதோ காகிதம், மரம், மட்டை, தூசு, துப்பு போல எரியக்கூடியக் கூடிய பொருள்தான் என்றால் அவர் அப்பாவித் தனத்தை களைய வேண்டியதும் அரசின் கடமைதான். இனியும் அவரை அலைகழிக்க வேண்டாம். 

மாநில அரசு ஏதாவது முடிவெடுத்தால் நிற்காமல் போகலாம். வெட்டியாக எதையாவது பேசி அமைதியாக சென்று கொண்டிருக்கும் தமிழ்ச் சமுதாயத்தில் அடிக்கடி ஏதாவது நெருப்பைக் கொளுத்திப் போட்டு பிரச்சைனைத் தூண்டிகளாக வாழ்ந்;;து வரும் தமிழிசை, எச்.ராஜா போன்றோர் இராமர் பிள்ளைக்கு ஏதாவது உருப்படியாய் செய்து தரலாமே!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,994.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.