Show all

விமர்சனங்கள்தான் இந்தியாவை ஒளிர வைக்கும்- பாஜகவிற்கு கமல் பதிலடி

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியான மெர்சல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நடுவண் அரசின் சரக்குமற்றும்சேவை வரி, எண்ணிம இந்தியா குறித்து விமர்சிக்கப் பட்டுள்ள கருத்துக்களுக்கு தமிழக பா.ஜ.க வினர் கடுமையாகக் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

படத்திலிருந்து குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். பலர் பா.ஜ.க வின் இந்த நடவடிக்கையை மக்கள் உட்பட யாரும் அங்கிகரிக்க வில்லை. இந்நிலையில் நடிகர் கமல் மெர்சல் படத்திற்கு பாஜகவின் எதிர்ப்பு குறித்து தனது கருத்தினை தனது கீச்சு பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் , ‘ஒரு படைப்பை இருமுறை தணிக்கை செய்யாதீர்கள். மெர்சல் திரைப்படம் ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. விமர்சனங்களைத் தெளிவான புரிதலுடன் கூடிய விளக்கங்களால் எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை வாயடைக்கச் செய்யாதீர்கள். விமர்சனங்கள் தான் இந்தியாவை ஒளிர வைக்கும்என மெர்சல் படத்தை எதிர்க்கும் தமிழக பாஜகவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார் கமல்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.