Show all

அசத்தல் வடிவமைப்பில், குறைந்த விலையில், சந்தைக்கு வரவு! மின்சக்தி பைக்குகள்

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல் பைக்குகளை விரும்புவதைப் போல மின்சக்தி பைக்குகளை எந்த ஆணும் விரும்புவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று மிடுக்கான தோற்றமின்மை இரண்டாவது அதிக விலை. 

அந்த இரண்டு காரணிகளையும் நிவர்த்தி செய்து, தீபாவளியை முன்னிட்டு, ஹீரோ எலக்ட்ரிக் பைக்குகள் சந்தைக்கு வந்;திருக்கின்றன. மேலும் பைக்குகளுக்கு, 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காமல், அன்னியச் செலாவனியை இருப்பு வைக்க, வாடிக்கையாளர்கள் வாங்கும் விலையில், ஹீரோ எலக்ட்ரிக் பைக்குகள், அழகிய வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த பைக்குகள், எரிபொருள் செலவை மிச்சப்படுத்த உதவும். தீபாவளியை முன்னிட்டு, அனைத்து வகை, ஹீரோ எலக்ட்ரிக் பைக்குகளுக்கும், 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், மூன்று ஆண்டுகள், வாரண்டியும் அளிக்கப்படுகிறது. ஹீரோ எலக்ட்ரிக், என்.ஒய்.எக்ஸ்., இ5 மாதிரி விலை, 51 ஆயிரத்து, 990 ரூபாய. ஆப்டிமா இ5 மாதிரி, 54 ஆயிரத்து, 990 ரூபாய்; போட்டோன் மாடல், 83 ஆயிரத்து, 990 ரூபாய் என்றளவில் உள்ளன. பிளாஷ் இ5 சீரிஸ் மாதிரி விலை, 41 ஆயிரத்து, 490 ரூபாய். இந்த, 5,000 ரூபாய் சலுகை, 10ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகம் முழுவதும், ஹீரோ பைக்கிற்கு, விற்பனை மற்றும் சேவை மையங்கள் உள்ளன. குறிப்பாக, சென்னையில், ஆறு விற்பனையாளர்கள் மற்றும் ஏழுக்கும் அதிகமான துணை விற்பனையாளர்கள் உள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,961.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.