Show all

ரிசர்வ் வங்கியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ2,52,00,000 நாணயங்கள் பறிமுதல்

நாமக்கல் அருகே ஆவணங்கள் இன்றி 4 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நாணயங்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

 

கீரம்பூரில் உள்ள சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரமாநிலம் ஐதராபாத்திலிருந்து, நாமக்கல் வழியாக திருவனந்தபுரத்திற்கு சென்ற 4 கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டதில், 2 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.

 

உரிய ஆவணங்கள் இல்லாததால், நான்கு லாரிகளையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர், நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில், 2 கோடியே 52 லட்சம் மதிப்பிலான நாணயங்கள் ரிசர்வ் வங்கியிலிருந்து கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டால், நாணயங்கள் திருப்பி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில், 3 பறக்கும் படை மற்றும் 3 சோதனை சாவடி குழுக்கள் அமைத்து வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். சங்கரன்கோவிலுக்கு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனைப் பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதேபோன்று தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.