Show all

சல்லிக்கட்டு தடைக்கு எதிரான அறவழிப் போராட்ட நாயகர்களுக்கு கிடைத்த பரிசு!

ஏழு நாட்கள் உலக வரலாறு காணாத வகையில், தொடக்கத்தில் சமுக வலைதளம் மூலம் ஒருங்கிணைந்த இளைஞர்கள்-

மாணவர்கள்-

அவர்களது பெற்றோர்கள்-

பல்வேறு அமைப்பக்கள்-

ஒட்டு மொத்த தமிழகம்-

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள தமிழர்கள்-

என,

சல்லிக் கட்டு தடைக்கு எதிரான அறவழிப் போராட்டம்,

உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்து-

தமிழக முதல்வரை-

அவர் சார்ந்த அரசு அதிகாரிகளை பம்பரமாகச் சுழன்று செயல்பட வைத்த நேர்த்தியான அழகுக்கு முன்னால்-

     அதன்பொருட்டு, நடுவண் அரசின் ஒப்புதலோடு  சல்லிக்கட்;டு தடையின்றி நடத்திக் கொள்ள கிடைத்த வெற்றிக்கனியை-

     அந்த வரலாற்று நாயகர்களான  சல்லிக் கட்டு தடைக்கு எதிரான அறவழிப் போராட்டக்காரர்களுக்கு பரிமாறுவதில் அருவருப்பான நடைவடிக்கையைக் கடைபிடித்து விட்டது அரசு.

     அந்த வரலாற்று நாயகர்களான  சல்லிக் கட்டு தடைக்கு எதிரான அறவழிப் போராட்ட நாயகர்களை விருந்துக்கு அழைப்பதற்கு-

     கட்சித் தலைவர்களையும், மாவட்ட ஆட்சியரையும், அமைச்சர் பெருமக்களையும் அனுப்பாமல்- குண்டாந்தடியோடு காவலர்களை அனுப்பி வைத்தால் என்ன நிகழும்?

     தமிழகமே கலவர மண்ணாக ஆவதற்கு அந்தப் புனிதர்கள் காரணமாக்கப் பட்டு விட்டார்கள்.

     அதிமுகவின் இறங்குமுகத்திற்கு நாள் குறித்து விட்டார் ஆளும் கட்சி முதல்வர்.

ஆந்தோ பரிதாபம்!

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.