Show all

தமிழ்பறவை ஆர்வலர்கள் கூட்டமைப்பின் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு

இந்தியாவில் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தும் மின்பறவை இந்தேயம் அமைப்பும், கணக்கெடுப்பை ஒருங்கிணைக்கும் குழுமமான பறவைக் கணக்கீட்டு இந்தேயமும் தமிழ்பறவை ஆர்வலர்கள் கூட்டமைப்பும் இணைந்து பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடத்துகின்றன.

     இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் கல்விக் கழகத்தின் பறவைகள் ஆர்வலர்களான சிவ.கணபதி, சுரேந்தர் இணைந்து வெளியிட்ட அறிக்கை:

     பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம், புதுச்சேரியில் தை முதலாம் நாள் தொடங்கி, நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

     பறவைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் கலந்து கொள்ளலாம். கணக்கெடுப்பில் பங்கேற்க உங்களைச் சுற்றியுள்ள ஏரி, குளம், ஆறு, தோட்டம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு மாடி என எந்தப் பகுதியிலும் தொடர்ச்சியாக குறைந்தது 15 நிமிடங்களுக்கு என்ன வகையான பறவைகள் வருகின்றன என்று பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு, பறவை பட்டியலைத் தயார் செய்ய வேண்டும்.

     அந்தப் பட்டியலை ebird.orgcontentindia என்ற இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

     பொங்கல் நாள்களில் எத்தனை முடியுமோ அத்தனை பறவை பட்டியல்களை உள்ளிடலாம்.

     புறவைகளைப் பார்க்க சிறந்த நேரம் அதிகாலை மற்றும் மாலை வேளை, எனினும், உங்களால் எப்போது முடியுமோ அப்போது கூட பார்த்து பட்டியலிடலாம். திறன்பேசி வைத்திருப்பவர்கள் ebirdஎன்ற உரலி மூலம் தகவலையும் படங்களையும் பதிவேற்றலாம்.

     பறவைகள் கணக்கெடுப்பு ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை ஆண்டுதோறும் கண்காணித்து அதற்கான காரணங்களை கண்டறிய முடியும்.

     கடந்தாண்டு தமிழகம், புதுச்சேரியிலிருந்து பொங்கல் நாள்களில் 1,296 பறவை பட்டியல்கள், 170 பறவை ஆர்வலர்களால், ebird india இணைய தளத்தில் உள்ளிடப்பட்டது.

     இந்த நாள்களில் மொத்தம் 334 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டன.

     அதிகமாக பதிவு செய்யப்பட்ட பறவைகளில் முதல் 10 இடங்களில் காகம், மைனா, அண்டங் காக்கை, பச்சைக் கிளி, மடையான், வெண்மார்பு மீன்கொத்தி, கரிச்சான், ஊர் தேன்சிட்டு, உண்ணிக்கொக்கு மற்றும் தவிட்டு குருவி ஆகியன இடம் பெற்றன.

     ebird india இணைய தளத்தில் நாம் பார்த்த பறவை பட்டியலை எப்படி உள்ளிடுவது, பறவை பார்த்தலின் நெறிமுறைகள், பறவைகளை அடையாளம் காண சில தமிழக பறவைகளின் தமிழ்ப் பெயர்களுடன் கூடிய படங்கள் முதலிய காட்சியளிப்புகளும், விளக்கவுரைகளும் birdcount.in ல் காணலாம்.

இதற்கான உரலி birdcount.  எனவே,

     இந்த பொங்கலுக்கு பறவைகளை கணக்கிட்டு சுற்றுச்சூழல் காக்க பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.