Show all

உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியும் நடவடிக்கை எடுக்காத நடுவண் அரசை!

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால், தமிழக அரசை கலைத்து விட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமியின் மிரட்டலுக்கு சீமான் பதிலளித்துள்ளதாவது:

     சுப்ரமணியம் சுவாமியின் கருத்து சரிதான். தயவு செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வாருங்கள். ஆனால் அதற்கு முன் காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் சொல்லியும் திறந்துவிடாத கர்நாடகா ஆட்சியை கலையுங்கள்.

     முல்லைப் பெரியார் பிரச்னையில் உச்சநீதிமன்றம் உத்தரவை காதில் கூட வாங்காத கேரளா அரசை கலைக்க சொல்லுங்கள்.

     உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நடுவண் அரசை கலைத்து விட்டு, பின் தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சியை தாராளமாக கொண்டு வாருங்கள்.

     தமிழர்களின் உணர்வுகளுடன் யாரும் விளையாடாதீர்கள். நிறைய பொறுத்து கொண்டுவிட்டோம். இனி எதையும் சகித்துக்கொண்டு இருக்க மாட்டோம். என சீமான் சீறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.