Show all

ஆவாரம்பூ, பீளைப்பூ,வேப்பிலை கொண்டு காப்பு கட்டுவோம்.

‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ என்று நற்றிணை

‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ என்று குறுந்தொகை

‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ என்று புறநானூறு

‘தைஇத் திங்கள் தண்கயம் போல’ என்று ஐங்குறுநூறு

‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ என்று கலித்தொகை

என வரலாற்றுப் பெருமைமிக்க,

நமது,

இயற்கையைப்போற்றும் பெங்கல்விழாவின் முதல்நாள் விழா,

போகித் திருவிழா!

இன்று தொடக்கம்.

இன்று வீட்டை முழுமையாகத் தூய்மைப் படுத்தி,

மாலையில்,

வரும் காலம் நலமாக அமைய வேண்டும் என்பதாக,

ஆவாரம்பூ, பீளைப்பூ,வேப்பிலை கொண்டு காப்பு கட்டுவோம்.

இன்றைய,

இனிய,

பொங்கல்விழா தொடக்கநாளில்,

உலகளாவிய தமிழர் அனைவருக்கும்,

மௌவல்செய்திகளின்,

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.