Show all

பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

     சல்லிக்கட்டு நடத்த நிரந்தர நீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் சில நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர்களின் போராட்டத்திற்குப் பொதுமக்கள், பெண்கள் என அனைவரும் ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த வௌ;ளிக்கிழமை விடுமுறை என அனைத்து தரப்பினரும் அறிவித்தனர். இதனால் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

     இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.

கடந்த சில நாட்களாக தலைமையே இல்லாமல் அறவழியில் தமிழகம் முழுவதும் அமைதியாக நடத்தப்படும் இந்தப் போராட்டம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் வரலாற்று சாதனையாக பேசப்பட்டு வருகிறது.

     இதையடுத்து தமிழக அரசு, தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை பிறப்பித்தது. இந்த அறிவிப்பிற்கு உற்சாகம் அடையாத இளைஞர்கள் கூட்டம், தற்காலிக தீர்வு என்பது எங்கள் நோக்கமல்ல! முந்தைய காலங்களில் நடந்தது போலவே கண்துடைப்பாக ஏதேனும் அறிவித்து போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய அனுமதிக்க மாட்டோம். பல்லாயிரமாண்டுகளாக நடந்து வரும் சல்லிக்கட்டை எந்த இடையூறும் இல்லாமல் இனி ஆண்டாண்டு காலம் நடத்தச் செய்யும் வகையில் காட்சிப் பட்டியல் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்ற நிரந்தரத் தீர்வை எட்டும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துவிட்டு ஆறாவது நாளாகத் எழுச்சிப்போராட்டம் தொடருகிறது.

     தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று கடந்த ஒருவாரகாலமாக இரவு பகலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது. அதே அவசரத்தோடு இன்று சல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகிய யாரையும் அலங்காநல்லூருக்குள் நுழையவிடவில்லை. போராட்டம் முன்னை விட வேகமடைந்துள்ளது.

இந்த நிலையில்

     தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கீழ் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் நாளை வழக்கம் போல இயங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக!

     சல்லிக்கட்டுக்காக தொடக்கத்திலிருந்து குரல் கொடுத்து வரும் தமிழக சல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் பி.ராஜசேகரன், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆய்வுக் கழக நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சேனாபதி, திருச்சி வீர விளையாட்டுப் பேரவை செயலாளர் ராஜேஷ், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

     சல்லிக்கட்டு நோக்கம் 90 விழுக்காடு நிறைவேறி விட்டது. மாணவர்களின் போராட்டம் தன்னிச்சையானது. யாரும் தலைவர்கள் கிடையாது எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உத்தரவிட முடியாது. தற்சமயம் ஒத்திவையுங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்கிற செய்தி தமிழக மக்களுக்கு ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

     இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்வலர்கள் அவசர சட்டம் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக கூறியுள்ளனர். தமிழக சல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் பி.ராஜசேகரன், அரசு இயற்றியுள்ள அவசர சட்டம் விரைவில் நிரந்தரமாகும் என்றார்.

     அதே போல செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேய சிவசேனாபதி, வெளிநாட்டு நிதி மூலம் தமிழக கால்நடைகளை அழிக்க பீட்டா அமைப்பு முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார். சல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மாணவர்கள் நடத்திய போராட்டம் 90 விழுக்;காடு வெற்றி பெற்று விட்டது. போராட்டத்தை இனியும் தொடர்வது அனைவருக்குமே சிரமம் என்றார்.

     உள்துறை அமைச்சரை சந்தித்து பீட்டா பற்றி கூறியுள்ளோம். தமிழக கால்நடைகளை பீட்டா அழிக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளோம்.

நடுவண் அரசிடம் விரைவில் பீட்டா மீது புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

     சல்லிக்கட்டுக்கான போராட்டத்துக்கு யாரும் தலைமை கிடையாது என்றும் சிவசேனாபதி கூறியுள்ளார். போராட்டத்தை கைவிட கூறி உத்தரவிட முடியாது. எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. மார்ச் 31ஆம் தேதிவரை போராட்டத்தை ஒத்தி வைக்கலாம். பிரதமருக்கும், முதல்வருக்கும் இரண்டு மாதங்கள் நேரம் கொடுக்கலாம் என்றும் கார்த்திகேய சிவசேனாபதி கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப் பட்டு வருகிறது.

     இவர்களின் இந்த வேண்டுகோள், பள்ளித் திறப்பு குறித்த அவசர அறிவிப்பு ஆகியவற்றில் ஏதாவது உள் நோக்கம் இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது.

     போராட்டத்தை கைவி;ட வலியுறுத்தலில் எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை என்கிற சொற்றொடர் உள்நோக்கத்தை உறுதிபடுத்தவதாகிறது.

     எட்டப்பர்கள் உருவாகிவிடவில்லை என்பதை காலம்தாம் உறுதி செய்ய முடியும்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.