Show all

தமிழ்மக்கள் எதிர்வினை! அண்ணமலை வருத்தப் பதிவுக்கு

இதுபோல இன்னும் நிறைய வருத்தப் பதிவுகளை நீங்கள் முன்னெடுக்க, ஒட்டு மொத்த தமிழினமும்; எதிர்வினையாற்றும் காலம் ஒரு பக்கம் கனிந்து கொண்டுதான் இருக்கிறது என்று தமிழ்மக்களின் எதிர்ப்பதிவுகள் இணையத்தில் தலைப்பாகி வருகிறது. 

28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர் என்பதாக
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்
கண்ணோட்டம் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் தெரிவித்திருப்பார். 

தமிழ்நாட்டில் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு நேற்று களமிறங்கியிருந்து தமிழர்களுக்கு உலகளாவி எல்லையில்லாத துயரங்களை கொடுத்தமைக்கு தமிழ்மக்களால் ஒட்டுமொத்தமாக விலக்கிக்கொள்ளப்பட்ட வடஇந்தியக்கட்சி காங்கிரஸ்.

தமிழ்நாட்டில் தங்களைக் தக்க வைத்துக்கொள்ள இன்று- தமிழ்நாட்டிற்கான கண்ணோட்டம் இல்லாத தமிழினப்பண்பாடு அறியாதவர்களைத் தமிழினத் தனித்துவம் புரியாதவர்களைக்  களமிறக்கியிருக்கிறது வடஇந்தியக் கட்சி பாஜக. 

அவர்கள் தமிழர்க்கு ஒவ்வா சரக்குகளை வணிகம் பேணி வருவதே பெரும்பிழையான முன்னெடுப்பு என்கிற நிலையில், வழக்கமான நடைமுறை நாகரிகம் இல்லாமல் இயங்கிக் கொண்டிருப்பது தமிழ்மக்களை வருத்தம் கொள்ள செய்கிற நடைமுறையாகத் தொடர்கிறது. 

புதன்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழர்க்கு ஒவ்வா பாஜகவிற்பனைச் சரக்குகளில் ஒன்றான நீட் தேர்வு குறித்து பேசிய அண்ணாமலை, ஆற்காடு வீராசாமி கூறியதாக ஒரு தகவலை சொல்வதற்கு முன்னர், 'ஆற்காடு வீராசாமி அண்ணன் இப்போது இல்லை, இறைவனடி சேர்ந்து விட்டார்' எனப் பேசினார்.

எண்பத்தைந்து அகவை ஆற்காடு வீராசாமி நலமுடன் உள்ள நிலையில், அரைகுறை தகவல் களஞ்சியமாக இயங்கிவரும் தமிழ்நாட்டு பாஜக களமிறங்கிகளில் ஒருவரான அண்ணாமலை இப்படி நஞ்சு வைத்துப் பேசியதால் திமுகவினர் நடுவே கடுஞ்சினம் மூண்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த பலரும் அண்ணாமலை பேச்சின் உண்மை தன்மையை ஆராயாமல் அந்தக் காணொளியை தொடர்ந்து பகிர்ந்தனர்.

ஆற்காடு வீராசாமி குறித்து தவறான தகவல் பரப்பப்பட்ட நிலையில் அவரது மகன் கலாநிதி வீராசாமி அதற்கு எதிர்வினை ஆற்றினார்.

கலாநிதி தனது கீச்சுப் பக்கத்தில், 'தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆற்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பாஜக அண்ணாமலை தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்' என்று பதிவிட்டார்.

உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்! நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன். என்று பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. 

இதுபோல இன்னும் நிறைய வருத்தப் பதிவுகளை நீங்கள் முன்னெடுக்க, ஒட்டு மொத்த தமிழினமும்; எதிர்வினையாற்றும் காலம் ஒரு பக்கம் கனிந்து கொண்டுதான் இருக்கிறது என்று தமிழ்மக்களின் எதிர்ப்பதிவுகள் இணையத்தில் தலைப்பாகி வருகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,276.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.