Show all

புழுதிக்கு போதை ஏற்ற முடியாது, கூட்டம் சேருங்கள்! அதிகாரிகளை விரட்டு விரட்டு என்று விரட்டிய பொன். ராதாகிருஷ்ணன்

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக பேச்சாளர்களிடம் புழுதிக்கு போதை ஏற்றவது என்கிற குழுஉகுறி அடையாளம் பயன் படுத்தப் பட்;டு வருகிறது. இன்றைக்கு புழுதிக்கு போதை ஏற்றினோம் என்று ஒரு பாஜக பேச்சாளர் சொன்னால் ஒலிவாங்கி அமைப்பவரைத் தவிர வேறு யாரும் கூட்டத்திற்கு பார்வையாளர்களாக வரவில்லை என்று பொருளாம். 

வேதாரண்யம் அருகே மக்கள் கூட்டம் இல்லாததால் அரசு விழா மேடையில் அமர நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

வேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமத்தில் நேற்று மேம்படுத்தப்பட்ட துணை சுகாதார மையம் மற்றும் நலவாழ்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இதையடுத்து அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததைக் கண்ட நடுவண் அமைச்சர் மேடையில் ஏறாமல் பார்வையாளர் வரிசையில் அரசு அதிகாரிகளோடு அமர்ந்து கொண்டார்.

அப்போது அரசு விழாவிற்கு பொதுமக்களை அழைக்காமல் விழா நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் கூறி வேதனைப்பட்டார்.

பிறகு அதிகாரிகளிடம் விழாவிற்கு பொதுமக்கள் வந்தால் பேசுகிறேன். இல்லை என்றால் உடனே கிளம்பி விடுவேன் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், கிராமத்திற்கு சென்று மக்களை திரட்டி வர நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பெரும்பாலான அப்பகுதியை சேர்ந்த வேளாண் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று இருப்பதால் கிராமம் வெறிச்சோடி இருந்தது. இதனால் அரசு அதிகாரிகள் வேன், கார்களில் சென்று கிராம மக்கள் திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 11 மணிக்கு சுகாதார மையம் திறப்பு விழாவுக்கு வந்த நடுவண் அமைச்சர் தொடர்ந்து பொதுமக்கள் வருகைக்காக மேடை ஏறாமல் பார்வையாளர்கள் வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அதிகாரிகள், சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களை அழைத்து வந்தனர். இதையடுத்து சமரசமான நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதியம் 1 மணிக்கு மேடையில் ஏறி பேசினார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,954.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.