Show all

இரா.கி.நகர் தேர்தல் வேட்புமனு பதிகை செய்ய வந்த 42சுயேட்சைகள்; சிலரின் விநோத நடவடிக்கைகள்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் இடைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி, தினகரன், திமுக., ஜெ.தீபா நடிகர் விஷால், அதிமுக, பாஜக ஆகியோருக்கு இடையே 7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

 

கடந்த வௌ;ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு பதிகை செய்திருந்தனர். கடைசி நாளான இன்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். தலையாய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு பதிகை செய்து விட்டனர்.

சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால், ஜெ.தீபா, பாஜக ஆகியோரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை பதிகை செய்தனர்.

3 மணிக்கு மனு பதிகை செய்ய அவகாசம் முடியும் நிலையில் வேட்பு மனு பதிகை செய்ய 42 சுயேட்சை வேட்பாளர்கள் அங்கு குவிந்து உள்ளனர். பிரபலமான நபர்கள் என்று பாகுபாடு இல்லாமல் விஷால், தீபா ஆகியோரும் வரிசையில் நின்று வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

நடிகர் விஷால் மனு பதிகை செய்ய வரும் போது வரிசை படியே அனுமதிக்க வேண்டும் என தேர்தல் அலுவலர் அலுவலகம் முன்பு சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்கிராக கிராமத்தை சேர்ந்த மணீதன் என்பவர் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு பதிகை செய்ய வந்தார்.

மனு பதிகை செய்யும் இடத்துக்கு அவர் பின்னோக்கியே நடந்து வந்தார். வித்தியாசமான முறையில் மனு பதிகை செய்ய வந்த அவரிடம் நிருபர்கள் அகவையைக் கேட்டனர். அதற்கு அவர் எனது அகவை 2 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 668 நிமிடம் (48 அகவை) என்றார். அவர் கடந்த 26 ஆண்டுகளாக பின்னோக்கியே நடந்து வருகிறார்.

அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகுதான் திருமணம் செய்வேன் என்கிறார். தற்போது இரா.கி.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

கோவையை சேர்ந்த நூர்முகமது என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் இன்று குதிரையில் அமர்ந்தபடி வேட்புமனு பதிகை செய்யும் இடத்திற்கும் வந்தார். பின்னர் வேட்புமனு பதிகை செய்தார்.

கோவையைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணும் சுயேட்சையாக இன்று வேட்புமனு பதிகை செய்ய வந்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் டெங்கு கொசு போலவும், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை வேண்டுவது போலவும் வேடமணிந்தபடி குளுக்கோஸ் பாட்டிலை தூக்கியபடி நடித்துக் கொண்டே வந்தனர்.

அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் தனலட்சுமியை மட்டும் வேட்புமனு பதிகை செய்ய அனுப்பி வைத்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,625

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.