Show all

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு 3மாதம் சிறை கட்டாயம்

ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் தமிழக அரசு சார்ப்பில் அறிவிப்பு வெளியானது.

இதனால் ஓட்டுநர்கள் இடையே குழப்பம் நிலவியது. மேலும், பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், வாடகை வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை முதலாளிகளிடம் ஒப்படைத்த பின்னர் தான் வாகனத்தை ஓட்ட முடியும் என்ற சூழ்நிலையும், அதுமட்டுமல்லாமல் அசல் உரிமம் தொலைந்துபோனால் அதற்கு மாற்று உரிமம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் நிலையும் உள்ளன.

இதனால், ஓட்டுநர் உரிமம் தொடர்பாக சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அசல் ஓட்டுநர் உரிமத்தை மறந்து வருபவர்களுக்கு அபராதம் மட்டும் போதுமானது.

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு மட்டும் 3 மாதம் சிறைத் தண்டனை கட்டாயம். மறதியைக் குற்றமாகக் கருத இயலாது என்று உத்தரவிடப்பட்டது.

 

நகல் எலலைக்கடவு வைத்துக்கொண்டு வெளிநாடு செல்ல இயலாது. அசல் எலலைக்கடவு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதுபோல வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் தேவை. இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என சென்னை உயர் அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜி கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.