Show all

விரைவில் முதல்வர் வேட்பாளர்களாக தமிழகத்தை கலக்க வரவிருக்கிறார்கள் கமல்-ரஜினி

ரஜினியின் அடுத்த கட்ட ரசிகர் மன்ற சந்திப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பை வரும் அக்டோபர் இரண்டாம் வாரம் ரஜினி நடத்துவார் எனத் தெரிகிறது.

     இந்த சந்திப்பின்போது உறுதியாக ரஜினி தனது அரசியல் கட்சியின் பெயரையும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

     கட்சியின் பெயர், அதைப் பதிவு செய்யும் நடைமுறைகளை ஏற்கெனவே தமிழருவி மணியனின் ஆலோசனையுடன் தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த்.

     இப்போது கட்சிக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறார். அடுத்த இரு வாரங்களில் இந்தப் பணிகளை முடித்துவிடுவார் ரஜினி என்கிறார்கள். ரஜினியின் கட்சி அறிவிப்பு குறித்த இந்த தகவல்களை ரஜினி ரசிகர்கள் ஏக உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

 

     தமிழக அரசை, அமைச்சர்களை கிச்சுவில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார் கமல் ஹாசன்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனி ஞாயிறுகளில் அரசியல் பேசினார் கமல்.

முதலில் தன்னை ஒரு அரசியல் விமர்சகனாக அறிவித்துக் கொண்டவர், இப்போது முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பல்வேறு கருத்துப் பறிமாற்றங்கள், வாதங்கள், விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ரஜினி கட்சி தொடங்கப் போகிறார் என்ற செய்தி.

     தமிழக மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஆட்சிக்கு வரப் போகிறவர்கள், மோடியின் அராஜக ஆளுமையிலிருந்து தமிழகத்தை விடுவிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.