Show all

தமிழ்நாட்டு துடுப்பாட்ட வீரர் செகதீசன் இரண்டு உலக சாதனை படைத்து அசத்தல்!

சென்னை அதிரடி அரசர்கள் (சிஎஸ்கே) அணி ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களை விடுவித்ததன் காரணமாக, கடும் அதிருப்தியில் இருந்த ஜெகதீசன், தனது எழுச்சியைத் துடுப்பாட்ட அரங்;கில் காட்டினார். இதன் பலனாய் தமிழ்நாட்டு துடுப்பாட்ட வீரர் செகதீசன் இரண்டு உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் ஹசாரே கோப்பை துடுப்பாட்டத் தொடரில் தமிழ்நாட்டு வீரர் செகதீசன் இரண்டு உலக சாதனை படைத்துள்ளார். 

அருணாச்சல் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் செகதீசன் 277 ஓட்டங்களை முன்னெடுத்து உலக சாதனை படைத்தார். விஜய் ஹசாரோ தொடர் தொடங்கும் முன் நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் அணிகள் வீரர்களை விடுவித்தது. இதில் சென்னை அதிரடி அரசர்கள் (சிஎஸ்கே) அணி ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களை விடுவித்தது. 

இதன் காரணமாக, கடும் அதிருப்தியில் இருந்த ஜெகதீசன், தனது எழுச்சியைத் துடுப்பாட்ட அரங்;கில் காட்டினார். விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்ற அவர், தொடர்ந்து 4 நூறுகளை விளாசி இருந்தார். 

இதன் மூலம் விராட் கோலி, ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரின் சாதனையை ஜெகதீசன் சமன் செய்த நிலையில், முந்தாநாள் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் அருணாச்சல பிரதேச அணியை தமிழ்நாடு அணி எதிர்கொண்டது. இதில் பூவா தலையா வென்று முதலில் பந்துவீசிய அருணாச்சல பிரதேச அணி பந்துவிச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய செகதீசன், சுதர்சன் இணை அசத்தலாக விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தனர். 

ஒரு கட்டத்தில் இந்த இணையைப் பிரிக்க முடியாமல் அருணாச்சல பிரதேச வீரர்கள் தடுமாறினர். 76 பந்துகளில் நூறை பூர்த்தி செய்த செகதீசன், உலக அளவில் தொடர்ந்து 5 முறை நூறு விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து 114 பந்துகளில் இரட்டை நூறை விளாசி சாதனை படைத்தார். 

தொடர்ந்து ஆறுகளைப் பறக்கவிட, 129 பந்துகளில் 250 ஓட்டங்களைக் கடந்தார். அதன் பிறகு ஒருநாள் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்கள் விளாசிய ரோகித் சர்மாவின் சாதனையையும் செகதீசன் முறியடித்தார். 

141 பந்துகளை எதிர்கொண்ட செகதீசன் 277 ஓட்டங்களை விளாசி, உலக அளவில் ஒருநாள் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதே போன்று உலக அளவில் ஒருநாள் போட்டியில் முதல் மட்டையிலக்குக்கு 416 ஓட்டங்கள் சேர்த்து, புதிய சாதனையை செகதீசன், சுதர்சன் இணை படைத்தது. இதன் மூலம் தமிழ்நாடு அணி 50 ஆட்ட முடிவில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 506 ஓட்டங்கள் சேர்த்து புதிய உலக சாதனை படைத்தது. 

உலக அளவில் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த பட்டியலில் 277 ஓட்டங்களுடன் செகதீசன் முதல் இடத்திலும், ஏடி பிரவுன் 268 ஓட்டங்களுடன் 2வது இடத்திலும், ரோகித் சர்மா 264 ஓட்டங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,440.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.