Show all

புதியதாக சந்தைக்கு வந்துள்ள மலிவுவிலை செல்பேசி! உற்பத்தி நிறுவனம் சாம்சங்

இவ்வளவு மலிவா! என்று வியக்கும் வண்ணம், சாம்சங் உற்பத்தி நிறுவனத்தின், கேலக்சி சுழியம் நான்கு புதிய மிடுக்குப்பேசி, ரூ.9499.00 விலையில் 4ஜபி ரேம் 64ஜிபி சேமிப்பகம் ஒரு பெரிய 5000 எம்எஎச் மின்கலம் ஆகியவற்றைக்  கொண்டுள்ளது.

03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: இவ்வளவு மலிவா! என்று வியக்கும் வண்ணம் ரூ.9499.00 விலையில்- முகஅடையாள திறப்பு வசதியுடன், நான்கு ஆண்டு பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் இரண்டு ஆண்டு மேம்படுத்தல்களுடன் சந்தைக்கு வந்திருக்கிறது சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எம்சுழியம்நான்கு என்கிற செல்பேசி.

வெளிர் பச்சை மற்றும் அடர் நீலம் என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது இந்த மிடுக்குப் பேசி. அமேசான் வலைதளத்தில் இந்த மிடுக்குப்பேசியை வாங்க முடியும். 

சாம்சங்கின் எம் தொடரின் இந்த மலிவு மற்றும் தரம்மிகுந்த எம்சுழியம்நான்கு நேற்று சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் இனி இதை வாங்கலாம். பேரறிமுகமான கேலக்ஸி எம் தொடரின் இந்தச் செல்பேசி மிகவும் மிடுக்கான தோற்றம் கொண்டது. மேலும் அதன் வடிவமைப்பும் மிகவும் தனித்துவமானது. நிறுவனம் இதை மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகையால், நுழைவு நிலை வரம்பில் வாடிக்கையாளர்கள் இதை அதிகம் விரும்புகின்றனர்.

விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்புக் கூறுகளைப் பற்றி பேசுகையில், கேலக்சி சுழியம்நான்கு மீடியா டெக் ஹெலியோ பி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி வரையிலான ரேம் உடன் இந்த மிடுக்குப்பேசி கிடைக்கிறது. கேலக்சி சுழியம் நான்கு 1டிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்துடன் வருகிறது.  

இது எதிர்கால புதுப்பித்தல்களுக்கு தயாராக இருக்கும் மிடுக்குப் பேசியாக அமைகிறது. கேலக்சி சுழியம் நான்கு ஒரு பெரிய 5000 எம்எஎச் மின்கலத்தைக் கொண்டுள்ளது. இது பேசிக்குத்தேவையான முழுமையான மின்சக்தியை வழங்குகிறது. 

கேலக்சி சுழியம் நான்கு 6.5 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ளது. சிறந்த கேப்சருக்காக, கேலக்சி சுழியம் நான்கு 13எம்பி மற்றும் 2எம்பி இரட்டை பின்புற படக்கருவியைக் கொண்டுள்ளது. கொண்டுள்ளது. கேலக்சி சுழியம் நான்கு 5எம்பி முன்பக்கப் படக்கருவியைக் கொண்டுள்ளது. இதனால் நல்ல தரமான தம்படங்களை எடுக்க உதவுகிறது.

கேலக்சி சுழியம் நான்கு 4ஜபி மற்றும் 64ஜிபி வகை ரூ.9499க்கும், 4ஜபி மற்றும் 128ஜிபி வகை ரூ.10499க்கும் விற்கப்படுகின்றது. சிறப்பு அறிமுகச் சலுகையாக, அனைத்து எஸ்பிஐ கடன் மற்றும் ஆதாய அட்டை பணப்பரிமாற்றங்களுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,466.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.