Show all

சிட்னி டென்னிஸில் சாம்பியன் பட்டத்தை வென்றது சானியா-ஹிங்கிஸ் ஜோடி

சிட்னி டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

 

ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் கரோலின்-கிறிஸ்டினா ஜோடியை 1-6,7-5,10-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது சானியா ஜோடி. சானியா-ஹிங்கிஸ் ஜோடி தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. இதுவரை 11 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள இந்த ஜோடிக்கு இது இந்த ஆண்டின் 2-வது வெற்றியாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.