Show all

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் அம்பதி ராயுடு, குல்தீப் யாதவ், கலீல் அகமது நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், தமிழகத்தின் விஜய் ஷங்கர், சகால் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் லியான், பெஹ்ரன்டர்ப்பிற்குப் பதில் ஆடம் ஜாம்பா, ஸ்டான்லேக் சேர்க்கப்பட்டனர். 

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவரில் 230 ரன்கள் குவித்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் சகால் 6 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் மற்றும் முகமது ஷமி தலா 2 விக்கெட்டையும்  வீழ்த்தினர். அடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் மற்றும் தவான் முறையே 9 மற்றும் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். எனினும் கோலி, டோனி மற்றும் ஜாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 49.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  தோனி 87 ரன்களும், கேதர் ஜாதவ் 61 ரன்களும் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.