Show all

தமிழரசன்! விஜய் ஆண்டனியின் அடுத்த படம்

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமிரு புடிச்சவன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழரசன் என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தை பாபு யோகீஸ்வரன் இயக்குகிறார்.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் 'தமிழரசன்' படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசன் படத்தின் முதல் பார்வை ஒட்டிகளும் வெளிவந்துள்ளன. மூர்க்கம் நிரம்பிய இளைஞனாக இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பார் என்று தெரிகிறது. மேலும் இது காவலர் கதை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெரும்பாலும் தான் கதைத்தலைவனாக நடிக்கும் படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைப்பது தான் வழக்கம். ஆனால் தமிழரசன் படத்தில் இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

எஸ்.என்.எஸ் மூவில் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் ஆண்டனி, கொலைகாரன் மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,036.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.