Show all

இந்தியாவின் தேசிய மொழிகள் தமிழ் உள்ளிட்ட இருபத்திஇரண்டு மொழிகள்! தனி ஒன்றாக எந்த மொழியும் இல்லை

05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் தேசிய மொழி எது எனக் கேட்டால் பலர் ஹிந்தி என்று பதில் கூறுகின்றனர். வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஹிந்திதான் தேசிய மொழி என்கின்றனர். ஆனால் உண்மையில் ஹிந்தி தேசிய மொழி அல்ல. 

இந்திய அரசியல்சாசனச் சட்டப்படி இந்தியாவின் தேசிய மொழி ஒன்றல்ல. தமிழ்; உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகள் ; அதனுள் ஹிந்தியும் ஒன்று. 

ஹிந்தியும் உருதுவும் வேறு வேறான மொழிகள் அல்ல. வடமொழி எழுத்தில் எழுதினால் அது ஹிந்தி. அரபு எழுத்தில் எழுதினால் அது உருது. 

வடஇந்தியா தொடர்ந்து முகமதியர்கள் படையெடுப்புக்கு உள்ளானதால், வடமொழி மற்றும் புத்தர் பேசிய பாலி உள்ளிட்ட பல உள்ளூர் மொழிகள் எல்லாம் காணாமல் போய் உருது வடமொழியில் எழுதிக் கொள்ளப் பட்ட ஹிந்தியானது.

அரபு எழுத்துமுறை என்பது அப்ஜதிய்யா அரபிய்யா என்றழைக்கப்படுகின்றது. இந்த எழுத்துமுறை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல மொழிகளை எழுதப் பயன்படுகின்ற முதன்மையான எழுத்து முறைகளில் ஒன்று. இலத்தீன் எழுத்துமுறைக்கு அடுத்தபடியாக அரபு எழுத்துமுறை உலகில் இரண்டாம் மிகப் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை ஆகும். முதலாக அரபு மொழியை எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் விரிந்து அச்சமயத்தின் தாக்கம் காரணமாக இஸ்லாம் உலகில் பல்வேறு மொழிகளின் பேசுவோர் அரபு எழுத்து முறையை பின்பற்றியுள்ளனர். அரபு மொழி சேர்ந்த செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேராத பாரசீகம், உருது, ஹவுசா, பாஷ்தூ, மலாய், பிராகுயி, சிந்தி போன்ற மொழிகளை பேசுவோர் சிறிய மாற்றங்களை செய்து இந்த எழுத்துமுறையை தனது தாய்மொழிகளை எழுதுவதற்காக பயன்படுத்தியுள்ளன.

இந்த எழுத்துமுறை முதலில் அரபு மொழி நூல்களையும், அதுவும் குறிப்பாக திருக்குர்ஆனையும், எழுதப் பயன்படுகிறது. பின்னர் இசுலாம் மதம் பரவிய பின்னர் பல மொழிக்குடும்பங்களில் உள்ள பிற மொழிகளின் வரிவடிவங்களையும் எழுதப் பயன்பட்டது. 

பாரசீக மொழி, உருது, பஷ்து, பலோச்சி, மலாய், கிசுவாகிலி, பிராகுயி, காசுமீரி, சிந்தி, பால்ட்டி, பாக்கிஸ்தானிய பஞ்சாபி, சீனாவின் சிஞ்சியாங் மாநிலத்தில் பேசப்படுகின்ற உய்குர், கசக், உசுபெக்கு, இலங்கை, மற்றும் சில நாடுகளிலுள்ள அர்வி, ஆப்பிரிக்காவில் மாண்டிங்கா, வுல்டி-புலார், ஒளசா முதலியவும், குர்திசுத்தான், பெலாரூசியன் தார்த்தார், கிர்கிசுத்தான், உதுமானிய துருக்கியம், போசினியாவில் செர்போ-குரோசியம், இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தில் உள்ள ஆச்சே மொழி ஆகிய நில-இன மக்கள் பேசும் மொழிகள் உட்பட வேறு பல மொழிகளும் அரபு எழுத்து முறையைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன.

அரபு எழுத்துகள் மொத்தம் 28. ஆனால் அவை முதலெழுத்தாகவும், சொல்லின் இடையேயும், கடைசியாகவும் வரும்பொழுது வடிவங்கள் மாறுபடுகின்றன. அரபு வலமிருந்து இடமாகப் படிக்கும் மொழி. ஆகவே முதல் எழுத்து என்பது வலது கோடியில் உள்ளது. கடைசி எழுத்து என்பது இடது கோடியில் உள்ளது. 

இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா, உத்தரகண்ட், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம்,சத்திஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் வடமொழியில் எழுதப் படுகிற உருதாகிய ஹிந்தி பேசப்படுகிறது. அந்தவகையில் பார்த்தால்,  முகமதியக் கொள்கைகளை கடுமையாக எதிர்க்கும் பாஜக ஹிந்துத்துவா அமைப்புகள் முதலில் இந்தியாவில் இருந்து அப்புறப் படுத்த முயல வேண்டிய மொழி ஹிந்திதான்.

குஜராத் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆதிக்கவாத வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் ஹிந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின்மேல் அப்பொருளைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் குறித்த தகவல்களை ஹிந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான உத்தரவை மத்திய அரசானது மாநில அரசாங்கங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.

இந்த வழக்கு குஜராத் தலைமை அறங்கூற்றவர் முகோபாத்யாயா தலைமையிலான அறங்கூற்றுவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஹிந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை அறங்கூற்றுமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்தது. இந்தியாவில் பெரும்பாலான மக்களால் ஹிந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது. தேசிய மொழி என்று எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை என தீர்ப்பு வழங்கினார். ஹிந்தி என்பது அலுவல்மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல என குஜராத் அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகளாக உள்ளன. 

இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 343(1) இன் கீழ் ஹிந்தி மொழியானது நடுவண் அரசின் மொழிகளுள் ஒன்றாகும். இந்தியக் குடியரசுக்கு தேசிய மொழி கிடையாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், பிற சட்டங்களும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்கவில்லை. அலுவல் மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கான அலுவல் மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் தமிழ்மொழி, கேரளாவில் மலையாளம், கர்நாடகாவில் கன்னடம், ஆந்திராவில் தெலுங்கு, குஜராத் மாநிலத்தில் குஜராத்தி என அந்தந்த மாநில மொழிகளே அலுவலக மொழியாக உள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,037.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.