Show all

வாழ்த்துக்கள் தங்கப்பெண் இளவேனில் வாலறிவன்! உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டியிலும் வென்று சாதிக்க.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டிக்கு, அண்மையில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப்பெண், இளவேனில், உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் 14 பேர் தகுதி.

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டி சீனாவில் 01-07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121 நாட்களில் (17-23,நவம்பர்2019) நடக்கிறது. 

இந்தப் போட்டிக்கு, அண்மையில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப்பெண், இளவேனில், உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் 14 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அண்மையில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப்பெண், இளவேனில், சீனாவில் நடக்கும் இந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டியிலும் வெற்றி பெற்று சாதிக்க வாழ்த்துகிறோம். வாழ்த்துகள் இளவேனில் வாலறிவன்.
     
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,266.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.