Show all

ஏராளமான போராட்டங்களுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் சென்னை அபார வெற்றி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 5-வது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழ் நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என ஏராளமான பிரச்சனைகள் இருப்பதால் இப்போது IPL  போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டாம், வேண்டும் என்றால் வேறு ஊருக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என ஏராளமான மக்கள் கூறி வந்தனர். மேலும் இந்தியா எப்போதுமே தமிழ்நாட்டு பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை எனவே IPL  போட்டி நடக்கவிடாமல் செய்தால் தான் இந்தியா முழுவதும் நாம் கவனம் பெற முடியும் என்பது பெரும்பாலான மக்களின் எண்ணம். எனவே நேற்று மாலை முதலே ஏராளமான போராட்டங்கள், சாலை மாறியல்கள் அண்ணா சாலையில் நடைபெற்றது. எப்படியோ ஒரு வழியாக ஏராளமான கைது நடவடிக்கைகளுக்குப் பிறகு காவல் துறை மற்றும் மத்திய கமாண்டோ படை உதவியுடன் இரவு எட்டு மணிக்கு போட்டி துவங்கியது. 

இப்போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணி முதல் முறையாக நேற்று சென்னை மைதானத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆட்டத்தை தொடங்கினார்கள். முதல் ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்த நரைன் இரண்டாவது ஓவரில் 12 ரங்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து கிறிஸ் லின் (22 ரன்),  ரானா (16 ரன்),  உத்தப்பா(29 ரன்) மற்றும் ரின்கு சிங் (2) என தொடர்ந்து ஆட்டமிழந்தனர். எனினும் கொல்கத்தா அணியில் றன் விகிதம் ஓவருக்கு 10 ரன் என்றே இருந்தது. இந்நிலையில் ஜோடி சேர்ந்த ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் நிதானமாக விளையாடினர். எனினும் ரஸ்ஸல் சிறிது நேரத்திலேயே அதிரடியை ஆரம்பித்தார். இந்த ஜோடி 76 ரன் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் (26 ரன், 25 பந்து) வாட்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.  எனினும் ரஸ்ஸல் 11 சிக்சர், 1 பவுண்டரி என 36 பந்தில் 88 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இறுதி வரை இருந்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. சென்னை அணி சார்பில் வாட்சன் 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன், ஜடேஜா மற்றும் தாகூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

அதைத் தொடர்ந்து 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாட்சனும் ராயுடுவும் ஆட்டத்தை துவங்கினர். இவ்விருவர் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்த நிலையில் வாட்சன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ராயுடு 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வைத்த ரெய்னா 14 ரன்னிலும் கேப்டன் டோனி 25 ரன்னிலும் வெளியேற ஆட்டத்தின் போக்கு மாறியது. ஆனால் அடுத்து வந்த பில்லிங்ஸ் 23 பந்துகளில் 56 ரன் அடித்ததால் மீண்டும் சென்னை அணிக்கு வாய்ப்பு வந்தது. இறுதியாக கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட  ஜடேஜா மற்றும் பிரோவா காலத்தில் இருந்தனர். இருவரும் தலா ஒரு சிக்ஸ் அடித்து சென்னை அணியை வெற்றி பெற செய்தனர். இறுதியாக சென்னை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

கொல்கத்தா அணி சார்பில் டாம் கரண் ௨ விக்கெட்டுகளையும், சாவ்லா, நரைன் மற்றும் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

2018 IPL Team Position
Rank TEAM M W L NRR Points
1 CSK 2 2 0 +0.254 4
2 SRH 1 1 0 +1.771 2
3 KXIP 1 1 0 +0.567 2
4 KKR 2 1 1 +0.195 2
5 MI 1 0 1 -0.271 0
6 DD 1 0 1 -0.567 0
7 RCB 1 0 1 -0.598 0
8 RR 1 0 1 -1.771 0

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.