Show all

ஒருநாள் போட்டி தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டகாரர் மோர்ன் வான் விக் 58 ரன்கள் எடுத்தார், அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 64 எடுத்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்களை எடுத்தது.

284 ரன்கள் இலக்குடன் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து அணியில், குப்டில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

லாதம் 54 ரன்களுடன் வெளியேறினார். இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது,

இதனால் தென் ஆப்ரிக்கா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.