Show all

3-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு

இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் முரளி விஜய், சஹாவுக்குப் பதிலாக புஜாரா, நமன் ஓஜா ஆகியோர் இடம்பிடித்தார்கள். இலங்கை அணியில் சங்ககாரா, முபாரக், சமீராவுக்குப் பதிலாக பெரேரா, பிரதீப், தரங்கா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.

முதல் ஓவரிலேயே ராகுலின் விக்கெட்டை கைப்பற்றினார் தம்மிகா பிரசாத். பிறகு நான்காவது ஓவரில் ரஹானே, பிரதீப்பின் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கோலி - புஜாரா கவனமாக ஆடினார்கள். 15-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. வீரர்கள் பெவிலியனுக்குத் திரும்பினார்கள். மழையால் முன்னதாகவே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகும் மழை நிற்கவில்லை. தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தது. இதனால் முதல் நாள் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனது. முதல்நாள் முடிவில் இந்திய அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 19, கோலி 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.