Show all

மீண்டும் தங்கம் வென்றார் உசேன் போல்ட்

சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின், ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் உசேன் போல்ட் 100 மீட்டர் பந்தயத்தை 9.79 வினாடிகளில் கடந்து தங்க பதக்கத்தை மீண்டும் கைப்பற்றினார்.

உசேன் போல்ட்க்கு கடும் போட்டியாக இருந்த அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன் 9.80 பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். கடந்த சில தினங்களாக உசேன் போல்ட் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் 100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிகளுக்குள் அவர் கடந்து விடுவாரா? என்ற கேள்வி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.