Show all

ஆஸ்திரேலியா 46 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்க்ஸ் வெற்றியை பெற்றது

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா அணி 125.1 ஓவரில் 481 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ், பின், மொயீன் அலி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

அதை தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் அணைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 149 ரன்களுக்கு ஆட்டம் இழந்து பலோ ஆன் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜான்சன், மார்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும் லயன், சிடில் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பலோ ஆன் ஆனதால் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்க்சில் 286 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அதிகபச்சமாக குக் 85 ரன்கள் குவித்தார். அதனால் ஆஸ்திரேலியா 46 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்க்ஸ் வெற்றியை பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளில் மூன்றில் இங்கிலாந்து அணியும், ஒன்றில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றிருந்தன.

தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது ஸ்டீவன் ஸ்மித்துக்கும், தொடர் நாயகன் விருது கிறிஸ் ரோஜர்ஸ் மற்றும் ஜோ ரூட் இருவருக்கும் வழங்கப்பட்டது. இந்த போட்டியோடு ஆஸ்திரேலியா அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் ரோஜர்ஸ் இருவரும் ஓய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.