Show all

ரூ500 கொடுத்தால் இந்தியாவில் உள்ள அனைவரின் ஆதார் விவரங்களையும் பெறலாம்

வெறும் 500 ரூபாய்க்கு UIDAI(Unique Identification Authority of India) இந்திய அரசு ஆதார் இணையத்திலிருந்து 1 பில்லியனுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளின் தகவல்களை பெற முடியும். UIDAI இணையத்தை முடக்கி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்ப்பரேட்டுகளுக்கு விற்று வரும் கும்பல்.

டர்பினே(Tribune News service) என்ற நிறுவனத்தை அடையாளம் தெரியாத ஒரு நபர் வாட்சப்பில் (whatsapp) தொடர்புகொண்டு , இந்தியாவில் உள்ள அனைத்து இந்தியர்களின் தகவல்களின் இருப்பிடமான UIDAI வை ஹேக் செய்துவிட்டதாகவும் இதுவரை லட்சத்திற்கும் மேற்பட்ட கார்ப்பரேட்டுகளுக்கு விற்று விட்டதாகவும் , உங்களுக்கு வேண்டுமென்றால் 500 ருபாய் paytm ல் செலுத்துங்கள் எனவும் கூறியுள்ளான். இதை முதலில் நம்ப மறுத்த அந்த நிறுவனம் பிறகு அந்த தொகையை செலுத்தியது. உடனே அந்த நிறுவனத்துக்கு அந்த அடையாளம் தெரியாத நபரிடமிருந்து இணையத்தின் பெயர் , லாகின் மற்றும் password கிடைத்துள்ளது. அதனை அவர்கள் பயன்படுத்தி உள்ளே சென்று எந்த ஆதார் என்னை டைப் செய்தாலும் அதனுடைய போன், முகவரி, ஈமெயில் என அனைத்து தகவல்களும் பத்து நொடிகளில் கிடைத்துள்ளது. 

அதன்பிறகு மேலும் ரூ 300 ஐ கொடுத்து அந்த கும்பலிடமிருந்து ஒரு மென்பொருளை வாங்கியுள்ளனர். அதில் ஆதார் அட்டையே அப்படியே வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதைப்பற்றி UIDAI யின் தலைவர் சஞ்சய் ஜிண்டாளிடம்  அண்ணிணிறுவனம் தொடர்பு கொண்டு கேட்ட போது, வெளியாட்கள் யாரும் UIDAI இணையத்தில் நுழைய முடியாது இருப்பினும் இது தொடர்பாக எங்கள் தொழில்நுட்ப குழு ஆராய்ந்த பிறகே கூற முடியும் என கூறியுள்ளார். 

இது தொடர்பாக TRIBUNE INDIA இணையம் வெளியிட்டுள்ள செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.