Show all

மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சந்தித்து வருகிறார். மாநில திட்டங்கள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

     பிரதமர் மோடியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சந்தித்தார். அப்போது மாநிலத்தின் வளர்ச்சித்திட்டங்கள் பேசியதாக தெரிவித்தார்.

     இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார்.

     மேற்கு வங்க மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமருடன் மம்தா பானர்ஜி விவாதித்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மோடியுடனான மாநில முதல்வர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.