Show all

நாகரீகமற்ற பாகிஸ்தான் பரப்புரைகள்

நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.வின் ஆண்டு பொதுஅவை கூட்டத்தில் சனிக்கிழமையன்று பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறியிருந்தார்.

பாகிஸ்தானை விமர்சித்து ஐ.நா அவைக் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் பேசிய பேச்சு, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பலத்த விவாதங்களை எழுப்பியது.

இந்தியாவிற்கு பதிலளிக்கும் விதமாக ஐ.நா கூட்டத்தில் பேசிய பாகிஸ்தானுக்கான ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி,

‘ஜம்மு கஷ்மீரில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகளை இந்திய வெளியுறத்துறை அமைச்சர் புறக்கணிக்கிறார். காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என கூறிக்கொள்கிறேன்என குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர்,

‘இந்தியாவின் நிர்வாகத்தில், நூற்றுக்கணக்கான அப்பாவி காஷ்மீர் குழந்தைகளும், பெண்களும் கொல்லப்படுகின்றனர். இந்தியா வீசும் பெல்லட் குண்டுகளால் காஷ்மீர் குழந்தைகளின் பார்வை பறிபோகிறதுஎன்று கூறினார்.

தனது பேச்சின் போது, முகத்தில் பெல்லட் குண்டுத் தழும்புகள் பதிந்திருக்கும் ஒரு சிறுமியின் புகைப்படத்தை கூட்டத்தில் காட்டினார் லோதி.

பாகிஸ்தான் மிஷன் யூ.என் என்ற கீச்சில்;,

இதுதான் இந்தியாவின் முகம்எனக் கூறி சிறுமியின் புகைப்படத்தை லோதி காட்டும் படத்தினை பதிவிட்டிருந்தனர்.

இந்த கீச்சை, லோதியும் தனது கீச்சு பக்கத்தில் மறுபதிவு செய்திருந்தார்.

பாகிஸ்தான் தூதர் காட்டிய சிறுமியின் புகைப்படத்தைக் கூகுள் படங்களில் தேடிப்பார்த்தால், இப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது அல்ல காசாவில் எடுக்கப்பட்டது என காட்டுகிறது என இந்தியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது.

இச்சிறுமியின் புகைப்படத்தை, ஜூலை 2014-ல் ஹெய்டி லெவின் என்ற புகைப்பட கலைஞர் காசாவில் எடுத்துள்ளார்.

கார்டியன் இணையதள புகைப்பட தொகுப்பு பகுதியிலும், இப்புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், இச்சிறுமியின் அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்தாகவும், அவரது உறவினர் தங்கை உட்பட மூவர் இறந்தாகவும் இப்புகைப்படத்தின் பட விளக்க பகுதியில் கூறப்பட்டுள்ளது.

தவறான புகைப்படத்தை ஐ.நா சபையில் மலீஹா லோதி காட்டினார் என்பது இந்திய தரப்பு வாதமாக உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.