Show all

யூபிஎஸ்சி முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: திமுக எம்.பி. திருச்சி சிவா

யூபிஎஸ்சி முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இரு வாரங்களாக வரலாறு காணாத கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளதால், டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை வைத்துள்ளார். தமிழகம்  வெள்ள சேதம் பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீளாத நிலையில் முதன்மை தேர்வுகளுக்கு தேர்வர்கள் தயாராவதில் சிக்கல் இருப்பதாக அவர் கூறினார்.

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது இன்று இப்பிரச்சினையை எழுப்பிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பெய்து வந்த வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் , சிவில் சர்வீஸ் தேர்வு எழுத உள்ளவர்கள் கடுமையான உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், பாடப்புத்தகங்கள் மற்றும் தேர்வுக்கான ஆதார நூல்கள் போன்றவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட தேர்வர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, யூபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கு தயாராக அவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் அளிக்க வேண்டும். வரும் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள யூபிஎஸ்சி முதன்மை தேர்வை இரண்டு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, இந்த விவகாரம் சமந்தப்பட்ட துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு சாதகமான முடிவு எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.