Show all

இது வேளாண் பெருமக்களுக்கான மோடி அரசின் ஆப்பு

     நடுவண் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய முடியாது.

     இது வேளாண் பெருமக்களுக்கான மோடி அரசின் ஆப்பு; அவர்களும் இப்போதே மோடி அரசுக்கான ஆப்பை கூர் தீட்டத் தொடங்கினால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகாவது அவர்களுக்கு மீட்பு.

     இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே ஏராளமான அரசு ஊழியர்களின் நடவடிக்கைகளைத் தாண்டி மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும்.   கசாப்பு தொழிலுக்காக, இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     இந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள உத்தரவுகள்:

அகவையில் குறைந்த கால்நடைகளை சந்தைக்கு யாரும் கொண்டுவர முடியாது

மேற்கண்ட விலங்குகளை சந்தைக்கு கூட்டி வருவோர் அதன் உரிமையாளர் கையெழுத்துடன் கூடிய ஒப்புதலுடன் வர வேண்டும்.

விலங்கின் உரிமையாளர் முகவரி, நிழற்பட அடையாள அட்டை நகல் ஆகிவையும் அவசியம்.

கால்நடையின் அடையாளங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

இறைச்சி தேவைக்காக கால்நடை சந்தைக்கு கொண்டுவரப்படவில்லை என தெரியப்படுத்த வேண்டும்.

கால்நடையை வாங்குபவரின் அடையாள அட்டை நகல், முகவரி உள்ளிட்ட விவரம் கொடுக்கப்பட வேண்டும்.

விவசாய தேவைக்காகவே கால்நடை வாங்கப்படுகிறது என்ற தகவலை உறுதி செய்ய தேவைப்படும் ஆதாரங்களை பெறவேண்டும்.

கால்நடையை வாங்குவோர் அடுத்த 6 மாத காலத்திற்குள் அதை விற்பனை செய்யமாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்.

அடுத்த ஆறுமாத காலத்திற்கு அந்த ஆவணங்களை பராமரிக்க வேண்டும.;

சோதனை செய்யும் அதிகாரியிடம் இந்த ஆவணத்தை தேவைப்படும் போதெல்லாம் காட்ட வேண்டும்.

கால்நடையை வாங்கியவர் அதை கசாப்புக்காக விற்பனை செய்ய கூடாது.

அரசின் கால்நடை பாதுகாப்பு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

மதம் தொடர்பான விழாக்களில் இந்த கால்நடைகளை (மாடு, எருமை, ஒட்டகம், காளை) பலியிடக்கூடாது

அரசின் சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வேறு மாநிலங்களுக்கு இந்த கால்நடைகளை விற்பனை செய்ய கூடாது

கால்நடை சந்தையில் நடைபெறும் விற்பனையின்போது அதுகுறித்து 5 நகல்கள் எடுத்து வைக்கப்பட வேண்டும். ஒன்று விற்பனையாளரிடம், 2வது வாங்கியவரிடம், 3வது வாங்கியவர் வாழும் வட்டாட்சியர் அலுவலகம், 4வது நகல், மாவட்ட தலைமை கால்நடை அலுவலர், 5வது நகல் கால்நடை சந்தை குழுவிடம் இருக்க வேண்டும்.

     உங்க முன்னோர் ஆடுமாடுகளை ஓட்டிக்கிட்டு எங்க நாட்டுக்குள்ள வந்தீங்க சரி. ஒங்களுக்கு மாடு தெய்வம் சரி.

அதுக்கு நாங்க என்னடா பாவம் செஞ்சோம்? ஒங்கள உள்ள விட்டத தவிர என்கின்றனர் மக்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.