Show all

பாஜகவைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் தாஜ்மகாலுக்கு சென்றது இதுதான் முதல்முறை

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கான பட்டியல் அடங்கிய கையேடு ஒன்றை உத்தரபிரதேச அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் தாஜ்மகால் இடம்பெறாததற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன.

இதனிடையே, பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது,

தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது. இதை இந்தியாவின் வரலாற்று சின்னம் என்று கூறுவது தவறு. வரலாறை திருத்த வேண்டும்என்றார்.

மேலும் தாஜ்மகால் உள்ள இடத்தில் சிவன் கோயில் இருந்தது என பாஜக எம்பி வினய் கட்டியார் கூறினார்.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத் நேற்று காலை ஆக்ராவுக்கு சென்றார். பின்னர் ஆதித்யநாத் தாஜ்மகாலுக்குள் சென்றார். பாஜகவைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் தாஜ்மகாலுக்கு சென்றது இதுதான் முதல்முறை.

இதனிடையே, முதல்வர் யோகி தாஜ்மகாலுக்குள் பார்வையிட்டபோது வடக்கு ஆக்ரா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் பிரசாத் கார்க் நிருபர்களிடம் பேசும்போது, ‘தாஜ்மகாலை கட்டுவதற்குமுன் அந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக தகவல்கள் உண்டு. அந்தக் கோயிலை இடித்தே முகலாயர்கள் தாஜ் மகாலை கட்டியுள்ளனர். இதுதான் உண்மைஎன்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.