Show all

சூலை1 முதல் சரக்குமற்றும்சேவை வரி அமல் கிடையாது: ஜம்மு காஷ்மீர் அரசு திட்டவட்டம்

ஒருமித்த கருத்து ஏற்படாமல் வரும் சூலை1 ஆம் தேதி சரக்குமற்றும்சேவை வரி விதிப்பு முறையை, காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

     ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை வரும் சூலை மாதம்1 முதல்  நாடு முழுவதும் ஆளும் பாஜக அரசு அமலுக்கு வர உள்ளது.

     இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் சரக்குமற்றும்சேவை வரி விதிப்பு முறையை அமல்படுத்த போவதில்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

     இது குறித்து அந்த மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் நயீம் அக்தர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் நேற்று  கூறியதாவது:

     சரக்குமற்றும்சேவை வரி விதிப்பு முறை மற்ற மாநிலங்களில் வரும் சூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருமோ வராதோ காஷ்மீரில் சரக்குமற்றும்சேவை வரி விதிப்பு முறையானது ஒன்றாம் தேதி அன்று அமல்படுத்த மாட்டாது.

பல்வேறு தரப்பினரும் இங்கு சரக்குமற்றும்சேவை வரியை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறும் கருத்துக்களை அனைத்துக் கட்சி குழு ஒன்று கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யும். அந்த குழுவிடம் இருந்து விரிவான அறிக்கை கிடைத்தவுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் அது குறித்து விரிவான பேச்சுவார்த்தை  நடத்தப்படும்.

 

     இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை சரக்குமற்றும்சேவை வரி அமல்படுத்தப்பட மாட்டாது. அரசியலைப்புச் சட்டம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கியுள்ள சில விதிவிலக்குகள் படியே, நாங்கள் செயல்படுகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

     அதென்ன! அது ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் சில விதிவிலக்குகள்?

மற்ற மாநிலங்கள் என்ன பாவம் செய்தன?

மன்னர் காலத்தில் கூட குறுநில மன்னர்கள் தாமே மக்களிடம் வரியை வாங்கி பேரரசுக்குச் செலுத்துவார்கள்.

வௌ;ளை ஆங்கில அரசுக்குக் கூட தத்தம் பகுதியை ஆண்ட மன்னர்கள் தாமே மக்களிடம் வரியை வாங்கி, கப்பம் செலுத்தினார்கள்.

அவ்வாறான கப்பத்தைக் கூட செலுத்த மறுத்தார் வீரபாண்டியக் கட்ட பொம்மன் என்று தானே- வீர வசனம் பேசி பெருமை பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதென்ன? ஆளும் பாஜக அப்படியொரு தெனாவட்டு!

அவர்களே நேரடியாக மக்களிடம் வரியை வாங்கி மாநில அரசுகளுக்குத் தருவது?

அதற்கு ஒருங்கிணைந்த சரக்குமற்றும்சேவை வரி என்று பேர் வைத்துக் கொள்வது.

நேரடியாக மக்களிடம் வரி வாங்கும் எளிமைப் பாட்டுக்குதாம் இந்த ஒருங்கிணைந்த எல்லாம்.

ஆளும் பாஜக அரசு ஒட்டு மொத்த இந்தியாவையும் ஹந்தி, ஹிந்துத்துவா மாநிலமாக மாற்றும் முகமாக செயல்பட்டு வருகிறது. அதன் பொருட்டே நேரடியாக மக்களிடம் வரி வாங்கும் முயற்சி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.