Show all

உலகின் சக்திவாய்ந்த தலைவர்: மோடிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்க வில்லை.

டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 தலைவர்களின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்டி முதலிடம் பிடித்துள்ளார்.

     இயங்கலை மூலம் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், இந்திய பிரதமர் மோடி ஓட்டுக்கள் எதையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     மக்களின் ஓட்டளித்ததன் அடிப்படையில் 100 தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்த போதைப் பொருட்களுக்கு எதிராக கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் ரோட்ரிகோ என்பது குறிப்பிடத்தக்கது.

     சக்திவாய்ந்த 100 தலைவர்களின் பட்டியலில் ரோட்ரிடோவைத் தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின், போப் பிரான்சிஸ், மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ், முகநூல் தலைவர் மார்க் ஜூகர்பெர்க், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

     இந்தேயாவிலிருந்து யாராவது இந்த வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் தேசத் துரோகி என்று சுப்பரமணி, பொன்னார், இசைத்தமிழ் யாரையாவது வைத்து அறிக்கை விட வைத்திருக்கலாமே! இந்த டைம்ஸ் பத்திரிக்கையை என்ன செய்வது என்று சங்கப் பரிவாரிடம் ஆலோசனை செய்து கொண்டிருக்கலாம் நம்ப மோடி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.