Show all

தலைவரான பின்னர் ராகுல்காந்தியின் நம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்த முதல் உரை

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின் தலையாய நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல், காங்கிரஸை நாங்கள் பழம்பெறும் மற்றும் இளமையான கட்சியாக மாற்றப்போகிறோம் என்று உற்சாகமாகப் பேசியுள்ளார்.

பா.ஜ.க-வுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாடு முழுவதும் பா.ஜ.க வன்முறை தீயைப் பற்றவைத்துள்ளது. இதை யாராலாவது நிறுத்த முடியுமென்றால், அது காங்கிரஸின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் மட்டும்தான் சாத்தியப்படும். காங்கிரஸை நாங்கள் பழம்பெறும் மற்றும் இளமையான கட்சியாக மாற்றப்போகிறோம்.

13 ஆண்டுகளுக்கு முன்னர் நான், இந்த நாட்டின் மீதும், இந்த நாட்டின் மக்கள் மீதும் நம்பிக்கை வைத்து அரசியலில் குதித்தேன். அரசியல் மக்களுக்கானது. ஆனால், இன்றைய அரசியல், மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. இன்றைய அரசியல் மக்களை முன்னேற்றுவதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, அவர்களை நசுக்க பயன்படுத்தப் படுகிறது. நாங்கள் பா.ஜ.க-வினரை எங்கள் சகோதர, சகோதரிகளாகப் பார்க்கிறோம். ஆனால், அவர்களின் கொள்கைகளை ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் மற்றவர்களின் பேச்சைக் கட்டுப்படுத்துகின்றனர். நாங்கள் மற்றவர்களின் பேச்சை அனுமதிக்கிறோம். மிகவும் பணிவுடன், காங்கிரஸின் தலைவர் பதவியை ஏற்கிறேன். மிகப் பெரும் ஆளுமைகளின் நிழலுக்கு மத்தியில் நான் நடை போடுவேன்.

என்று உரையாற்றியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,638

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.