Show all

வாக்குச் சீட்டு முறையில் நடக்கப்போகும் இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல்

இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் 64 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

      இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்தவற்கான இறுதி நாள் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. மொத்தம் 127 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

      64 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச் சீட்டு முறையிலேயே வாக்குப் பதிவு நடைபெறும். தற்போதைய சூழலில் களத்தில் 82 பேர் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதிநாள் திங்கள்கிழமை ஆகும்.

      வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட 82 பேரில் 18 பேர் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றால் மட்டுமே வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தமுடியும். இல்லையெனில் வாக்குச் சீட்டு முறைதான் பயன்படுத்த முடியும். கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தவிர மாற்று வேட்பாளர்களும், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் சுயேச்சை வேட்பாளர்களாகவும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

      இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் வாக்குச் சீட்டு முறையா அல்லது வாக்குப் பதிவு இயந்திரமா என்பது குறித்து வரும் 27-ஆம் தேதி தெரிந்துவிடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இராதாகிருஷ்ணன் நகரில் மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 256 ஆகும். இங்கு ஒரு வாக்குச்சாவடிக்கு 4 இயந்திரங்கள் வீதம் பயன்படுத்தும் அளவுக்கு மின்னணு இயந்திரங்கள் புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தயார் நிலையில் உள்ளன.

      இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றால் முறைகேடு நடைபெறுவதை தவிர்க்கலாம் என்பதால் அந்த முறையை பின்பற்ற வேண்டும் என்று டெல்லி தேர்தல் ஆணையத்திடம் திமுக பாராளுமன்றஉறுப்பினர்களான இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் மனுக்களைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது

      தமிழகத்தில் திமுக ஆட்சியை நிறுவுவதற்கு மக்கள் வழங்கும் பச்சை விளக்கு சைகையாக,  இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும் என்று திமுக,

சாம பேத தான தண்டம் என்று அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.