Show all

சரக்குசேவைவரிச் சட்டம் சூலை 1ம் தேதி திட்டமிட்டபடி அமல்படுத்தப்படும்

சரக்குசேவைவரிச் சட்டம் சூலை 1ம் தேதி திட்டமிட்டபடி அமல்படுத்தப்படும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது. சரக்குசேவைவரிச் சட்டம் அமலாகும் தேதி ஒத்திவைப்பு என்பது வெறும் வதந்தியே எனவும் நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

     நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறை என்ற தலைப்பில் கொண்டு வரும் சரக்கு மற்றும் சேவை வரி முறையை பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசு அறிமுகம் செய்ய உள்ளது. பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, சூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என நடுவண் அரசு அறிவித்தது.

     தொடர;ந்து பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களையும் நடுவண் அரசு அறிவித்தது. இதனிடையே சரக்குசேவைவரிச் சட்டம் அமலாகும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மிஸ்ரா, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

     இந்நிலையில், சரக்குசேவைவரிச் சட்டம் அமலாகும் தேதி ஒத்திவைக்கப்படுவதாக வந்த தகவல்கள் வெறும் வதந்தி என தெரிவித்துள்ள நடுவண் அரசு, திட்டமிட்டபடி சூலை 1ம் தேதி அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.