Show all

பாஜகவின் வேடிக்கையான, வினோத முயற்சி! கர்நாடகத் தேர்தல் வெற்றிக்கனி பறித்திட

06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான் சஞ்சய் பட்டீல். நான் ஒரு ஹிந்து. இது ஹிந்துஸ்தானம். நாம் இராமர் கோயிலைக் கட்டியெழுப்ப வேண்டும். யாருக்கெல்லாம் பாபர் மசூதி, திப்பு ஜெயந்தி வேண்டுமோ அவர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கட்டும். யாருக்கெல்லாம் சிவாஜி மன்னரின் ஆட்சி, இராமர் கோயில் வேண்டுமோ அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை சாலை, குடிநீர் பிரச்சினைகள் தீர்மானிக்கப் போவதில்லை. ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தான் முடிவு செய்யப்போகின்றன. இராமர் கோயிலுக்கும் பாபர் மசூதிக்கும் இடையிலான பிரச்சினைகள் தான் தீர்மானிக்கப் போகின்றன என பேசியுள்ள காணொளி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. 

இது வடக்கு கர்நாடகத்தில் அமைந்துள்ள பெலகாவி பகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் பட்டீல், தேர்தல் கருத்துப் பரப்புதலின் போது பேசிய காணொளி 

இது பாஜகவினருக்கு வெற்றியைத் தேடித்தருமா? எதிர் வினையாக இதுவே தோல்விக்கு அடித்தளமிடுமா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,762.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.