Show all

மதவாததேசிய சக்திகளிடம் நாட்டைக் காப்பாற்றுங்கள்! குஜராத் போராயர் உருக்கம்

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் கருத்துப் பரப்புதல் சூடுபிடித்துள்ளது. ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி தீவிரமாக கருத்துப் பரப்புதல் செய்துவருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க, குஜராத் சட்டமன்றத்தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் கருத்துப் பரப்புதல்களில் ஈடுபட்டுவருகிறது.

தேர்தல் கருத்துப் பரப்புதல் இறுதி; கட்டத்தை எட்டும் நிலையில் கத்தோலிக்க பேராயர் தாமஸ் மக்வான் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் அந்த கடிதத்தில், ‘சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுவதால் ஜனநாயக வழியில் மதவாததேசிய சக்திகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுங்கள். மதவாததேசிய சக்திகள் தேசத்தை மொத்தமாக எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. குஜராத் தேர்தல் அதற்கு வாய்ப்பில்லாத நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறி இருந்தார். பின்னர் கடிதத்துக்கு விளக்கம் அளித்த தாமஸ்,

குஜராத்தில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அரசியலமைப்பு உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. நம் ஒவ்வொருவருடைய பிரார்த்தனையும் தேசத்தை மதவாததேசிய சக்திகளிடம் இருந்து காப்பாற்றும்.

இதுபோன்று கடிதம் எழுதுவது இது முதல் முறையல்ல. தேர்தலுக்குத் தேர்தல், மக்களுக்கு வழிகாட்ட முயற்சி செய்கிறோம். பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கிறோம்

என்று தெரிவித்து இருந்தார். பேராயரின் கடிதம்குறித்த செய்தி குஜராத் பத்திரிகைகளில் வந்துள்ளது.

மதவாததேசிய சக்திகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுங்கள் என இந்தக் கடிதம் எழுதிய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்கப் பேராயருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை அறிக்கை வழங்கியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,619

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.