Show all

சசிகலா சகோதரி மகளுக்கும், அவரது கணவர் பாஸ்கருக்கும் சிறை தண்டனை சொத்து குவிப்பு வழக்கில்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் தினகரனின் சகோதரி ஆவார். அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியர். பாஸ்கரனும், அவரது மனைவியும், தமிழ்தொடர்ஆண்டு-5090முதல் 5099வரை (1988- 1997) ஒன்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு 18இலட்சம் மாதம் ஒன்னரை இலட்சம் வீதம் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக நடுவண் புலனாய்வுத் துறை தமிழ்தொடர்ஆண்டு-5100 ல் (1998) வழக்குப்பதிவு செய்தது.

மாதம் ஒன்னரை இலட்சம் எல்லாம் தகவல் தொழில் நுட்பத் துறை பணியாளர் எளிமையாக வாங்குகிற சம்பளம்;;தானே இதெல்லாம் சொத்துக் குவிப்பா என்று கேட்;கத் தோன்றுகிறதா? அரசியல்ல இதெல்லாம் சகசமப்பா!

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தமிழ்தொடர்ஆண்டு-5101ல் (1999) நடுவண் புலனாய்வு அறங்கூற்று மன்றத்தில் குற்றப்பத்திரிகை பதிகை செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

தமிழ்தொடர்ஆண்டு-5103ல் (2001) சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்ட இந்த வழக்கில் தமிழ்தொடர்ஆண்டு-5110 ல் (2008) எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் மற்றும் 20 லட்சம் ரூபாய் அபராதம், சீதளாதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அறங்கூற்றுவர் நாகநாதன் தீர்ப்பு வழங்கினார். இதனை எதிர்த்து, அதே ஆண்டே, இருவரும், சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

மேல் முறையீட்டு வழக்கில் இருவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்து வழக்கை உயர் அறங்கூற்றுமன்றம் விசாரித்து வந்ததது.

இந்த வழக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த 9 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இருவரது தண்டனையையும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,608

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.