Show all

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.35.40 க்கு கொடுக்க தயார்! பாபாராம்தேவ், மோடி அரசுக்கு அறைகூவல்

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு அனுமதித்தால் இந்தியா முழுவதும் ரூ.35.40க்கு பெட்ரோல், டீசல் வழங்குவதாக யோக குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும் பாபாராம்தேவ்: அரசு சில வரிச்சலுகைகளோடு அனுமதி வழங்கினால், இந்தியா முழுவதும் ரூ.35.40-க்கு பெட்ரோல், டீசலை வழங்குவேன் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், எரிபொருட்களை சரக்கு-சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்றார். விலையுயர்வு காரணமாக மோடி அரசு கடுமையாக பாதிக்கும் என்றும், அவர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். 

பணத்தை தேடி ஓடுவதில்லை என்ற பாபா ராம்தேவ், பணம் தன்னைத் தேடி வருவதாக அப்போது குறிப்பிட்டார். முன்பு பாஜக ஆதரவாளராக இருந்த பாபாராம்தேவ்: அரசியலில் இருந்து விலகிவிட்டேன் என்றாலும் நான் எல்லா கட்சியிலும் இருப்பேன். எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று கூறினார். பசுக்களை சிலர் மத ரீதியாக பார்க்கின்றனர். ஆனால் பசுவிற்கு மதம் என்பது கிடையாது என்று பாபா ராம் தேவ் கூறியது, பாஜக மீது அவர் வெறுப்படைந்துள்ளதைக் காட்டுவதாக இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 

ஒருவேளை பாபா ராம்தேவ், பாஜகவிற்கு எதிராக செயலாற்றினால், பாஜகவிற்கு பலத்த அடியாக அமையும் என்று கருதுகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,913.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.