Show all

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் 85 விழுக்காடு இடஒதுக்கீடு ரத்து

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்ய அகில இந்திய அளவில் தகுதி  தேர்வு நடத்த நடுவண் அரசு கல்வி வாரியத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.

     அந்த முடிவு பாரபட்சமானது என்று தமிழகத்தின் சார்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்களும் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டன.

     ஆனால் நடுவண் அரசு பாரபட்சமான அந்தத் தேர்வைப் பிடிவாதமாக நடத்தி முடித்தே விட்டது. அந்தத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை பல்வேறு மாநிலங்கள் தொடங்கியுள்ளன.

     தமிழகப் பாடத்திட்டம் நடுவண் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் இருந்து மாறு பட்டதான நிலையில்,

நடுவண் அரசு கல்வி வாரியத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்ட நிலையில,;

அது நடத்திய தகுதித் தேர்வில் தமிழக மாணவர்கள் உண்மையான வெற்றியைத் தக்கவைக்க இயலாமல் போனது.

     சரி அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்று தமிழக அரசு அதில் 85 விழுக்காட்டை தமிழக மாணவர்களுக்கு அறிவித்து அரசாணை வெளியிட்டது.

     இதற்கு மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தஞ்சையைச் சேர்ந்த மாணவர் தரணிஷ்குமார், சென்னை மாணவர் சாய் குமார் உள்பட மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் இது தொடர்பாக சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

     இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அறங்கூற்றுவர் ரவிச்சந்திர பாபு வெளியிட்டார்.

அவர் தனது தீர்ப்பில்,

‘மருத்துவ சேர்க்கைக்கு தமிழக அரசு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியிருப்பது மாணவர்கள் மத்தியில் பாரபட்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகையால் தமிழக அரசின் அரசாரணையை ரத்து செய்கிறேன்’

என்று கூறியுள்ளார்.

     விடாப்பிடியாக பாரபட்சத்தை திணித்த போதும், தீர்வான இன்னொரு பாரபட்சத்தை தடைசெய்கிற போதும் பாதிக்கப் படுவது என்னவோ தமிழக மாணவர்களே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.