Show all

தலைவலி, கழுத்து வலியால் அவதி! இயங்கலை வகுப்பில் பங்கேற்கும் 36 விழுக்காட்டு மாணவ-மாணவிகள்

இயங்கலை வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பலருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்படுவதாகவும், இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு பிரிவினரும் கோரிக்கை விடுத்தனர்.

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இயங்கலை வகுப்பில் பங்கேற்கும் 36 விழுக்காட்டு மாணவ-மாணவிகள் தலைவலி, கழுத்து வலியால் அவதிப் படுவது பேசுபொருளாகி உள்ளது.

கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் இயங்கலை மூலமே வகுப்புகள் நடந்து வருகிறது. 

இயங்கலை வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பலருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்படுவதாகவும், இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு பிரிவினரும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் நேற்று காங்கிரஸ் (எஸ்) உறுப்பினர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். அதில் இயங்கலை வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது அவரது கேள்வியாக இருந்தது.

இதற்கு கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி விடை அளித்து பேசியதாவது:- ஆம்! பள்ளிகளில் தொடர்ந்து இயங்கலை மூலம் வகுப்புகள் நடந்து வருவது நல்லதல்ல. இதன்மூலம் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன.

தொடர்ந்து இயங்கலை வகுப்புகளில் பங்கேற்று வரும் மாணவர்களில் 36 விழுக்காட்டு பேர்களுக்குத் தலைவலியும், கழுத்து வலியும் ஏற்படுகிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாததே இதற்கு காரணம்.

மேலும் அவர்கள் மனதளவிலும் சோர்ந்து போகிறார்கள். பள்ளிகளுக்கு நேரில் சென்றால்தான் அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் உற்சாகம் அடைவார்கள். எனவே ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் கேரளாவில் பள்ளிகளைக் கட்டம், கட்டமாக திறக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.