Show all

பல்வேறு சலுகைகளை வஞ்சனையின்றி அள்ளி வழங்கியிருக்கிறது! பீகார் மாணவர்களுக்கு, மாநில கல்வி வாரியம்

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வில் இந்திய அளவில முதல் மதிப்பெண் பெற்ற, கல்பனா குமாரி பீகார் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர். பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அவருக்கு போதிய வருகைப்பதிவு இல்லாத நிலையில் விதியை மீறி தேர்வு எழுத அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

டெல்லியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் சேர்ந்த கல்பனா குமாரி கடந்த 2 ஆண்டுகளாகவே தீவிரமாக தேர்வுக்கு தயாராகியுள்ளார். இதனால், பனிரெண்டாம் வகுப்பு தேர்வைப் பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை. டெல்லியில் தங்கி பயிற்சி பெற்றதால், அவர் பீகாரில் உள்ள பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் இருந்தது.

இதனால் பனிரெண்டாம் வகுப்பு படித்தபோது வகுப்புக்கு சரியான முறையில் அவர் செல்லவில்லை. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 75 விழுக்காடு வருகைப்பதிவு கட்டாயம் ஆகும். ஆனால் அவருக்கு போதிய வருகைப்பதிவு இல்லாதபோதும், சிறப்பு அனுமதி வழங்கி அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபோலவே பீகார் மாணவர்களுக்கு மாநில கல்வி வாரியம் பல்வேறு சலுகைகளை வஞ்சனையில்லாமல் அள்ளி வழங்கியிருப்பது வெளியாகியிருக்கிறது. பீகார் பள்ளித் தேர்வு வாரியம் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிட்டது. அதில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலருக்கு தாங்கள் எழுதிய தேர்வின் மதிப்பெண்ணைக் காட்டிலும், கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேர்வுக்கே வராத மாணவர்கள் சிலருக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜன்வீன் சிங் என்ற மாணவி பேசுகையில், உயிரியல் தேர்வுக்கு நான் செல்லவில்லை, ஆனால், எனக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். பீகார் பள்ளி கல்வி வாரியத்தின் இந்தச் செயல்பாடு பீகார் மாணவர்களின் தகுதியுயர்த்திக் காட்டுவதற்கான சலுகையா? இல்லை குளறுபடியா என்று குழம்பி நிற்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,813. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.