Show all

கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக உலையில் வைத்த பருப்பு வேகவில்லை! 20சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லாது

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆம் ஆத்மியின் 20 சட்டமன்றஉறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது செல்லாது என டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பு மக்களாட்சித் தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை பதவி நீக்கம் செய்தது தவறு என்று இந்த தீர்ப்பு உணர்த்துவதாக கீச்சுப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கெஜ்ரிவால். 20 ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செல்லாது என டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்த குடிஅரசு தலைவரின் உத்தரவையும் டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர்கள் 20 பேர் அமைச்சர்களின் நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றஉறுப்பினர்கள் இரட்டை ஆதாய பதவி வகித்ததாக புகார் எழுந்தது. டெல்லி அரசின் முடிவை கடுமையாக எதிர்த்த பாஜக, ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகிப்பது என்பது சட்டத்தை மீறிய செயல் என சரமாரியாக குற்றம்சாட்டியது.

இதனையடுத்து அந்த 20 சட்டமன்றஉறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் தெரிவித்தன. இந்த புகாரின் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், 20 சட்டமன்றஉறுப்பினர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை என்பதால், அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என கடந்த குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட 20 சட்டமன்றஉறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். தேர்தல் ஆணையத்தின் தகுதிநீக்க பரிந்துரையை எதிர்த்து ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர்கள் 20 பேரும் டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்கட்சிகளின் வாதம் நிறைவடைந்த நிலையில் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 20 ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செல்லாது என டெல்லி உயரஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து குடியரசுத்தலைவர் ராம்கோவிந்த் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,735.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.