Show all

ஆளுநர் விடை என்ன! நீட் விலக்கு சட்டமுன் வரைவை குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது ஏன் என்ற வினாவிற்கு

நீட் விலக்கு சட்டமுன் வரைவை குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது ஏன் என்ற வினாவிற்கு, ஆளுனர் தரப்பு விடை: பண சட்டமுன்வரைவு நீங்கலாக, வேறு எந்தவொரு முன்வரைவாக இருந்தாலும், அது சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வரைவாக இருந்தாலும் கூட அதன் மீது ஆளுனருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதாவது அவருக்கு, நீட் விலக்கில், தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை ஏற்றிட விருப்பம் இல்லையாம்! 

24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக முந்தைய அதிமுக அரசும், தற்போதைய திமுக அரசும், தமிழ்நாட்டில், பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என அக்கட்சி தனது தேர்தல் பரப்புரையில் கூறிஇருந்தது.

அதேபோல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வரைவை நிறைவேற்றி- ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனர் ஆர்என் ரவிக்கு அனுப்பியது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.

இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கண்டனம் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு மீண்டும் சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டு ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனர் ஆர்என் ரவிக்கு அனுப்பப்பட்டது. இது தற்போது கிடப்பில் உள்ளது. 

இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலினும், ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனர் ஆர்என் ரவியை அண்;மையில் சந்தித்து வலியுறுத்தினார். இருப்பினும் ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனர் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை.

இந்நிலையில் ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனர் ஆர்என் ரவியை திரும்ப பெறக்கோரி மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான அறிக்கை வழங்கியிருந்தது. நீட் விலக்கு சட்டமுன்வரைவை குடிஅரசுத்தலைவருக்கு அனுப்பாமல் ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனர் காலதாமதம் செய்வது குறித்து உள்துறை அமைச்சர் அமித்சா பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் 2 முறை வெளிநடப்பு செய்தனர்.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனர் ஆர்என் ரவி தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வருகின்றார். இதனால் தமிழ்நாடு அரசு, ஆளுனர் மாளிகை மீது அதிருப்தியில் உள்ளது. இதன் வெளிப்பாடு தான் மக்களவையில் ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனர் ஆர்என் ரவியை திரும்ப பெறக்கோரியதாகும். 

நீட் விலக்கு சட்டமுன்வரைவு குறித்து ஆளுனர் தரப்பு கூறுகையில், பண சட்டமுன்வரைவு நீங்கலாக, வேறு எந்தவொரு முன்வரைவாக இருந்தாலும், அது சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வரைவாக இருந்தாலும் கூட அதன் மீது ஆளுனருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். 

மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சட்டமுன்வரைவை அனுப்பிவைக்க வேண்டும் என்ற அழுத்தம் என்பது ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனருக்குக் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு முதல்வர், ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனரை சந்தித்தபோது சட்டமுன்வரைவு தொடர்பான நிலை, சட்டப்பாட்டு சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பின்படி அரசு செயல்பட வேண்டிய கட்டாயம் குறித்து விளக்கப்பட்டதாகவும் ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். 

தனது நிலைப்பாட்டை முதலமைச்சருக்கு, தலைமை செயலாளர் புரிய வைத்திருப்பார் என்று நம்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுனருக்கு எதிராக மக்களவையில் திமுகவினர் எழுப்பி வரும் குரல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 'தனது பொறுப்பை தான் கவனித்து வருவதாகவும், திமுகவினரின் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை என்றும் தெரிவித்து தான் சார்ந்துள்ள கட்சிக்கான அரசியலை தெளிவுபடுத்தியுள்ளார்.

எவ்வளவு உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும். அவர் பாஜகவைச் சார்ந்தராக இருந்தால், இப்படித்தான் மிரட்டல் தொனியில் குழப்புவாரோ? என்று தமிழ்நாட்டு மக்கள் விழிபிதுங்க மலைத்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,211.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.