Show all

கள்ள ரூபாய்தாள் அதிகரிப்புக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவியிருக்கிறது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர் மதிப்புடைய ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், கள்ள ரூபாய்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அப்படியானால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மறைமுகமாக கள்ள ரூபாய்தாள் அதிகரிப்புக்கு உதவியிருக்கிறதா? எனும் கேள்வி எளிய மக்களின் மூளைக்கு எட்டியிருக்கிறது! ரூபாய்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், சந்தேகப்படும் படியான பணப்பரிவர்த்தனையானது 480 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் நிதித்துறை புலனாய்வு பிரிவின் தகவல் கூறுகிறது.

நாடு முழுவதும் திடீரென்று உயர் மதிப்புடைய ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய்தாள்கள் மதிப்பிழப்பதாக நள்ளிரவில்; அறிவிக்கப்பட்டது. 

அதற்கான காரணங்கள் ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து முன் வைக்கப் பட்டது. ஆனால் முன் வைக்கப் பட்ட ஒவ்வொரு காரணங்களாக தவிடு பொடியாகி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை வடிகட்டின முட்டாள்தனம் என்று நிருபணம் ஆகிக்;;;; கொண்டேயிருக்கிறது. 

தீவிரவாதிகள் மத்தியில் பணநடமாட்டத்தை குறைக்கவும், பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் இந்த நடவடிக்கை அமலுக்கு வருவதாக மோடி அறிவித்தார். 

முன் ஏற்பாடுகள் இன்றி திடீரென அறிவிக்கப்பட்ட இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணப்புழக்கமின்றி மக்கள் திண்டாடினர். தங்கள் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை கூட எடுக்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மரணங்கள் கூட நடந்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் நிலைகுலைந்தது, மக்கள் ஏடிஎம் ஏடிஎம்களாக பணம் தேடி அலைந்தனர். போதுமான அளவு பணம் கிடைக்காமல் திண்டாடிய மக்களுக்கு எண்;ணம இந்தியா என்றது நடுவண் அரசு. அதாவது பணப்பரிமாற்றங்கள் முழுவதையும் எண்ணிம முறைக்கு மாற்ற அறிவுறுத்தியது. 

இந்நிலையில் உயர் மதிப்புடைய ரூபாய் தாள்கள் மதிப்பிழந்ததற்குப் பின்னர் கள்ள ரூபாய்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அதிக அளவில் கள்ள ரூபாய்தாள்கள் பிடிபட்டு வருவதாக, நடுவண் அரசின் நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது. 

கள்ள ரூபாய்தாள்களின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றமும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு நிதியாண்டில் 480 விழுக்காடு அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவின் ஆய்வறிக்கை கூறுகிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எவ்வளவு கறுப்புப்பணம் பிடிபட்டுள்ளது என்ற விவரம் இன்னும் வெளியிடப்படாத நிலையில் மோடியின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில் நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவின் இந்த அறிக்கை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல எதிர்கட்சிகளின் வெப்பத்தை அதிகரித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,764.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.