Show all

தோல்வி அச்சத்தில் மோடி அரசின் தடுமாற்றம்! செய்தி, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பு

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொய் செய்திகள் வெளியிடும் இதழியலாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று நடுவண் அரசு அறிவித்து- செய்தி, ஊடகங்களுக்கு எதிரான நடைமுறையை மேற்கொள்ள முனைவதில் இருந்து- தோல்வி அச்சத்தில் மோடி அரசின் தடுமாற்றம் தொடங்கி விட்டது. 

இந்த அறிவிப்புக்கு மூத்த இதழியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது இதழியல்,  மற்றும் இதழியலாளர்கள் மீதான தாக்குதல் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல இதழ்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில், பொய்யான செய்திகள் வெளிவருவதாகவும், இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிடும் நிருபர்களுக்கு அளிக்கப்படும் அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் நடுவண் தகவல், ஒலிபரப்புதுறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று கூறினார்.

பொய் செய்தி வெளியிடும் நிருபர்கள் குறித்து, பிரஸ் கவுன்சில் மற்றும் தேசிய தொலைக்காட்சி கூட்டமைப்பு ஆகியவை விசாரிக்கும் என்று அவர் கூறினார்.

ஒரு முறை விதி மீறினால் 6 மாத தடை, இரண்டாவது முறை என்றால் 1 ஆண்டு தடை, 3வது முறை விதி மீறினால் நிரந்தரமாக அங்கீகாரம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பல இதழியலாளர் அமைப்புகள், மூத்த இதழியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது இதழியலாளர்கள் மற்றும் இதழ்கள் மீதான நேரடி தாக்குதல். இது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டு வந்த அவதூறு தடுப்பு சட்டத்தை போன்றது. இதை எதிர்த்து அனைத்து இதழியலாளர்களும் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று மூத்த இதழியலாளர் சேகர் குப்தா கூறியுள்ளர்.

இது பொய் செய்திகளை வெளியிடாமல் தடுப்பதற்கான அறிவிப்பன்று நடுவண் அரசை அம்பலப் படுத்துகிற  செய்திகளை வெளியிடாமல் இருப்பதற்கான அச்சுறுத்தல்! இந்த அறிவிப்பு இல்லாமலே நடுவண் அரசின் பல மக்களின் அடிப்படை உரிமைகளுக் கெதிரான பல மேசடிகளைக் கண்டும் காணாமல் இருக்கின்றன பல வெகுசன இதழ்கள். இந்த அறிவிப்பு நடைமுறைப் படுத்தப் பட்டால் சர்வாதிகாரந்தான் கொடி கட்டிப் பறக்கும் என்று இதழியலாளர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,746.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.