Show all

இந்தேயா முழுவதும் 8ஆம் வகுப்பு வரை ஹிந்தியைக் கட்டாயமாக்குங்கள்: உச்சநீதிமன்றத்தில் மனு

இந்தேயா முழுவதும் 8ஆம் வகுப்பு வரை ஹிந்தி மொழி பாடத்தைக் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     நாட்டின் ஒற்றுமையையும் வலிமையையும் அதிகரிக்கும் பொருட்டு என்று ஹிந்தி மொழியை கட்டாயமாக்க பள்ளிகளுக்கு நடுவண், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     இந்த மனு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

     1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மும்மொழி கொள்கையின் அம்சங்களை சுட்டிக் காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. டெல்லி செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஷ்வினி குமார் உபத்யாய்,

மும்மொழி கொள்கையின்படி ஹிந்தி அல்லாத மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி கற்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்

     ஹிந்தி பேசுகிற தலைவர்களின் கட்சியான காங்கிரஸ் மட்டும் பாஜக மட்டுமே நடுவண் அரசை தக்க வைத்துக் கொள்வதால்,

ஹிந்தி மொழியானது நேரடியாகவும் மறைமுகமாகவும் மாற்று மொழி பேசும் மாநில மக்கள் மீது திணிக்கப் படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அதே சமயம் மாநிலக் கட்சிகள் எதுவும் நடுவண் அரசில் தலையாய இடம் பெற்று விடக் கூடாது என்பதில் காங்கிரசும், பாஜகவும் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருக்கின்றன.

முதலாவதாக மாநில சுயஆட்சிக்கான உரிமைக் குரல் எழுப்பிய தமிழகமே-

திமுக, அதிமுக கட்சிகளால் அவர்கள் குடும்ப நலன்களுக்காக தமிழர் உரிமைகள் கேடயமாகப் பயன் படுத்;;;தப் பட்டு வருகின்றன.

ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிரரத மாநிலத் தலைவர்கள் ஒருங்கிணைந்து நடுவண் அரசில் ஒரு கூட்டணி ஆட்சியை உருவாக்க முயலாத வரை

ஹிந்தித் திணிப்பிற்கு சாவுமணி அடிப்பது என்பது முயற்கொம்பே!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.