Show all

வடஇந்தியாவில் ஒரு சிங்கப் பெண்ணா! ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில், ஹிந்தி நடிகை தீபிகாபடுகோனே

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில், ஹிந்தி படவுலக முன்னணி நடிகை தீபிகா படுகோனே பங்கேற்று வடஇந்தியாவில் ஒரு சிங்கப் பெண்ணா என்கிற மலைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில், ஹிந்தி படவுலக முன்னணி நடிகை தீபிகா படுகோனே பங்கேற்று வடஇந்தியாவில் ஒரு சிங்கப் பெண்ணா என்கிற மலைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், விடுதி கட்டண உயர்வு போன்ற பல்வேறு நிருவாகச் சிக்கல்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த இடதுசாரி மாணவர்கள் மீது முகமூடி அணிந்து வந்த வன்முறை கும்பல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் தாக்குதல் நடத்தியது. 

இது தொடர்பாக பல்வேறு காணொளிகள் வெளியாகி நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிசத் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக இடதுசாரி மாணவர் அமைப்புகள் கூறுகின்றன. 

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம்; என்று, ஹிந்து ரக்ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார். ஆனால், ஹிந்து ரக்ஷா தள் அமைப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தினார்களா? என்று விசாரணை நடத்தி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தங்கள் தரப்பு மீதும், தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இடதுசாரி மாணவர்கள்தான் இதன் பின்னணியில் இருப்பதாகவும், அகில பாரத வித்யார்த்தி பரிசத் குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி மாணவர்கள் அமைப்பு சார்பில் ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்றும் முழக்கப் போராட்டம் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், இன்று இரவு சுமார் 8 மணி அளவில் தீபிகா படுகோனே அங்கு வருகை தந்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் மாணவர்களுடன் போராட்டத்தில் பங்கெடுத்து விட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். தேசிய குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற முதன்மையான சேதிகளில் ஹிந்திப் படவுலக நடிகர், நடிகைகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், புகழ்தளத்தில் இருக்கும் நடிகையாக அறியப்படும் தீபிகா படுகோன், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் நேரடியாக பங்கெடுத்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போராடக்கூடிய மாணவர்களுக்கு இது உற்சாகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,390.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.